“அந்த” வார்த்தையை விட்ட உதயநிதி.. “ஆளுநரை இப்படியா பேசுவது?” கொந்தளித்த பாஜக - டிஸ்மிஸ் செய்யனுமாம்
சென்னை: நீட் எதிர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சித்த உதயநிதி ஸ்டாலினை கடுமையாக சாடி இருக்கிறார் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "ஆளுநருக்கு எவ்வளவு திமிர்? எவ்வளவு கொழுப்பு?.. உங்களுக்கு சவால் விடுகிறேன். தமிழ்நாட்டில் ஏதோவொரு தொகுதியில் போட்டியிடுங்கள், உங்களால் ஜெயிக்க முடியுமா? மக்களை சந்தியுங்கள், உங்கள் சித்தாந்தங்களை தமிழக மக்களிடம் சொல்லுங்கள். "செருப்பை கழட்டி அடிப்பாங்க" என்று தமிழக முதலமைச்சரின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல அநாகரீகமான அரசியலும் கூட.

செருப்பால அடிப்பாங்க என்ற சொல் வன்மத்திற்குரியது, சட்டத்திற்கு புறம்பானது. என்று பேசுபவருக்கு தான் திமிர் மற்றும் கொழுப்பு?ஜெயிக்கவில்லையென்றால் மக்கள் 'செருப்பால் அடிப்பார்கள்' என்று அர்த்தம் என்றால், திமுக எண்ணற்ற கணக்கான தேர்தல்களில் தோல்வியுற்றது உலகத்திற்கே தெரியும்.
1980, 1984,1991 தேர்தல்களில் தோற்ற திமுகவை தமிழக மக்கள் செருப்பால் அடித்தார்கள் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா? உங்கள் தந்தை கூட தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றிருக்கிறார். ஆனால், நீங்கள் கேட்ட கேள்வியை இங்கே கேட்டு உங்கள் அளவிற்கு நான் தரம் தாழ்ந்து பேச மாட்டேன்.
2001, 2011, 2016 தேர்தல்களில் படு தோல்வியடைந்தீர்களே? மக்கள் திமுகவை செருப்பால் அடித்தார்களா என்று பொருள் கொள்ள வேண்டுமா? 2014 ஆம் ஆண்டு மக்களைவை தேர்தலில் மக்கள் திமுகவை செருப்பால் அடித்து புறமுதுகிட்டு ஓடச்செய்தார்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்களா?
மக்களின் இவ்வளவு செருப்படியையும் பெற்று கொண்டு தொடர்ந்து திமுக தேர்தல்களில் போட்டியிடுவது கேவலமில்லையா? வெட்கக்கேடு இல்லையா? மானக்கேடு இல்லையா? ஒரு மாநிலத்தின் அமைச்சர், அதிலும் முதலமைச்சரின் மகன் குடியரத்தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநரை தரம் தாழ்ந்து தரம் கெட்டு 'செருப்பால் அடிப்பாங்க' என்று பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியதோடு, வன்மையாக கண்டிக்கத்தக்கது.
உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். pic.twitter.com/BdYMOZJ7U6
— Narayanan Thirupathy (@narayanantbjp) August 20, 2023
முதிர்ச்சியற்ற, அராஜகமான, அநாகரீகமான, மக்களை தூண்டி விடும் முறையில் பேசியுள்ள உதயநீதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இப்படி தரக்குறைவாக பேசிய அமைச்சரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டிப்பதோடு, அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்." என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
-
உதயநிதி முதல்வர்! எடப்பாடி துணை முதல்வர்! எப்படியிருக்கு பாருங்க! அணுகுண்டை போட்ட ஆதவ் அர்ஜுனா -
நீட், சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகள்.. பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்! தர்மேந்திர பிரதான் உருக்கம்! -
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications