Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடியாத்தம் குமரனை கைது பண்ணுங்க.. மோடி பற்றி என்ன சொன்னாரு தெரியுமா - பாஜக நாராயணன் போர்க்கொடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடி, அண்ணாமலையை தரக்குறைவாக பேசிய திமுகவை சேர்ந்த குடியாத்தம் குமரனை கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தி உள்ளார்.

வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன் கடந்த ஜூலை 6 ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எழுதிய கடிதத்தில், "குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த, திராவிட முன்னேற்றக் கழகத்தைச் துணை கொள்கை பரப்பு செயலாளர் குமரன் என்பவர் பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களையும், தமிழக பாரத ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு Kஅண்ணாமலை IPS அவர்களை தொடர்ந்து பொது தளங்களிலும் (Youtube) சமூக ஊடகங்களில் ஆபாச வார்த்தைகளாலும் தொடர்ந்து இழிவு படுத்தி வருகிறார்.

 BJP Narayanan Thirupathi demand DMK Gudiyatham Kumaran arrest

குமரனை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் குடியாத்தம் குமரன் யூடியூபை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளவும். வன்முறையை துண்டும் வகையில் ஒருமையிலும் பேச்கூடிய குமரன் போன்றோரை கைது செய்ய தவறும் பட்சத்தில் மக்களை திரட்டி மிகபெரிய அளவில் போராட்டம் நடைபெறும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக கேட்டுக் கொள்கிறோம்." என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பாஜக ஒன்றிய செயலாளர் விமல்குமார் என்ற இளைஞரை சமூக ஊடகத்தில் முதல்வர் குறித்தும் அவர் குடும்பம் குறித்தும் தரக்குறைவாக விமர்சித்தார் என தி மு கவை சேர்ந்த ஒருவர் செய்த புகாரின் அடிப்படையில் வேலூர் மாவட்ட காவல் துறை கைது செய்திருக்கிறது.

எந்த ஒரு தனிநபரையும், குடும்பத்தினரையும் அவதூறாக, தரக்குறைவாக விமர்சிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை என்றாலும், தொடர்ந்து தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அவரின் குடும்பத்தாரையும் தரக்குறைவாக விமர்சித்து வரும் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த பலர் மீது பாஜகவினர் நூற்றுக்கணக்கான புகார்களை அளித்தும் நடவடிக்கை எடுக்க தயங்குகிறது.

குறிப்பாக, இதே வேலூர் மாவட்டத்தை சேர்ந்த குடியாத்தம் குமரன் என்ற திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஒரு நபர் பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை மற்றும் அவர் குடும்பத்தினரையும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் மிகத் தரக்குறைவாக பேசி வருவது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் அமைதி காக்கிறது வேலூர் மாவட்ட காவல் துறை.

இது குறித்து உரிய ஆதாரங்களுடன் பாஜக வேலூர் மாவட்ட தலைவர் திரு.மனோகரன் அவர்கள் கடந்த 06/07/2023 அன்று வேலூர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் நேரடியாக புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. வேலூர் மாவட்ட காவல்துறையின் இந்த இரட்டை நிலைப்பாடானது, முரண்பாடு மிகுந்த செயல்பாடானது, தி மு க விற்கு சாதகமாக நடந்து கொள்ளும் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

யார் குற்றச் செயலில் ஈடுபட்டாலும் கண்டிக்க வேண்டிய காவல்துறை ஆளுங்கட்சி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க அஞ்சுவது, தயங்குவது காவல் துறைக்கே களங்கம் விளைவிக்கும் செயலாகும். வேலூர் மாவட்ட காவல்துறை திமுகவின் ஏவல்துறை அல்ல என்பதை உணர்த்த உடனடியாக குடியாத்தம் குமரன் என்கிற நபர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அந்த நபரின் சமூக ஊடக செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+