13 தொகுதி இடை தேர்தல்..துள்ளி குதிக்கும் ‘இந்தி’ கூட்டணி! உள்ளுக்குள்ளேயே மூண்ட சண்டை! பாஜக பதிலடி!
சென்னை: சமீபத்தில் சில மாநிலங்களில் நடந்து முடிந்த இடைத் தேர்தல் முடிவுகள் குறித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் தங்களின் கூட்டணி பெரும் வெற்றி பெற்று விட்டதாகவும், பாஜக கடும் தோல்வியடைந்ததாகவும் துள்ளிக் குதித்து கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.
மக்களவை தேர்தல் நிறைவடைந்த கையோடு, தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதி, இமாச்சல பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதியை அறிவித்தது. 10ஆம், தேதி வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், 13 தொகுதி இடைத்தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் - 5, திரிணாமுல் காங்கிரஸ் - 4 , ஆம் ஆத்மி - 1, திமுக - 1, பாஜக - 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு இடத்தியில் சுயேட்சை வேட்பாளர் வென்றனர்.
இந்நிலையில் நடந்து முடிந்த சில மாநில இடைத் தேர்தலிகளில் பாஜக கடும் தோல்வியடைந்ததாகவும் துள்ளிக் குதித்து கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற நான்கு இடைத்தேர்தல்களில் அனைத்திலும் திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
அனைத்து தொகுதிகளிலும் பாஜக இரண்டாம் இடத்தில் வந்துள்ளது. இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் இரண்டு தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்ததோடு, பாக்டா தொகுதியில் ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ரனாகட் தக்க்ஷின் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி (சி பி எம்) டெபாசிட் இழந்து 13,082 வாக்குகளை பெற்றுள்ளது. அந்த தொகுதியில் பாஜக பெற்ற வாக்குகள் 74,485. மனிக்டாலா தொகுதியில் போட்டியிட்ட சிபிஎம் வெறும் 9502 வாக்குகள் பெற்று போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வி டெபாசிட்டை கூட இழந்து நிற்கிறது.
பீகாரில் ரூபாலி தொகுதியில் வெற்றி பெற்றது சுயேச்சை வேட்பாளர். இரண்டாம் இடம் பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்திற்கு. INDI கூட்டணியின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. யாரோ பெற்ற வெற்றியை தனதாக்கி கொண்டு மார் தட்டி கொள்கின்றன எதிர்க்கட்சிகள். ஹிமாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி மூன்றில் இரண்டு இடங்களை பெற்றுள்ள நிலையில், ஒரு இடத்தில் பாஜக வென்றுள்ளது பலமே! பாஜக ஆளும் மத்தியப்பிரதேசத்தில் உள்ள அமர்வாரா தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாபில் INDI கூட்டணியின் ஆம் ஆத்மி வெற்றி பெற்ற நிலையில், அதே INDI கூட்டணியின் காங்கிரஸ் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது, இரண்டாவது இடம் பாஜகவுக்கு. இதை தங்கள் கூட்டணியின் வெற்றி என காங்கிரஸ் சொல்வது கேலிக்கூத்து. பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் இரு இடங்களில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் பாஜகவுக்கு தோல்வி தான் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே.
தமிழகத்தில் விக்கிரவாண்டி தேர்தலை அ தி மு க புறக்கணித்திருந்தாலும் அக்கட்சி தி மு க வின் 'B' டீமாய் செயல்பட்ட நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியுற்றது அதிர்ச்சியோ, ஏமாற்றமோ அல்லது எதிர்பாராததோ அல்ல என்பதை அரசியல் புரிந்த அனைவரும் ஒப்புக்கொள்வர். பல மாநிலங்களில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் படு தோல்வி அடைந்துள்ளதோடு, மூன்றாவது, ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டும், டெபாசிட்டை கூட தக்க வைக்க இயலாத நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.
INDI கூட்டணி என்று சொல்லிக்கொண்டு பஞ்சாப், மேற்கு வங்காள மாநிலங்களில் அதே கூட்டணி கட்சியிடம் தோற்பது வெட்கக்கேடானது என்பது குறித்து கவலைப்படாமல், தோல்வியைத் தழுவினாலும் பாஜக தோற்றுவிட்டது என்பது மலிவான பசப்பு அரசியல். 'அறுவை சிகிச்சை வெற்றி, நோயாளி இறந்து விட்டார்' என்ற நிலையில் தான் இன்று INDI கூட்டணி உள்ளது என்பதை இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தெள்ளத் தெளிவாக உணர்த்துகின்றன.
உத்தரகண்ட் மாநிலத்தை தவிர மற்ற மாநில இடைத் தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவடைந்துள்ளது என்பதே உண்மை. இதே நிலை நீடித்தால், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் காணாமல் போவதோடு, விரைவில் வெற்றுத்தாளில் இப்போதுள்ள INDI கூட்டணி சுக்கு நூறாக உடைந்து போகும் என்பது காலத்தின் கட்டாயம்.” என கூறியுள்ளார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
இந்தியா தான் முக்கியமான அச்சாணி.. நங்கூரம் போல் நச்சுன்னு சீனாவிற்கு செக்.. அமெரிக்கா பாராட்டு -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications