பழைய போட்டோவை போட்டு.. திமுகவை கிண்டலடித்த பாஜக நாராயணன்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: திமுக அரசின் புதிய திட்டம் என்று கூறி பாஜக உறுப்பினர் நாராயணன் திரிப்பாதி பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார். இவரின் இந்த ட்வீட்டிற்கு நெட்டிசன்கள் பலர் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.
நடிகரும், பாஜக உறுப்பினருமான எஸ்வி சேகர் தனது ட்வீட்டர் பக்கத்தில் முக்கியமான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தமிழ்நாடு சாலைகளை விமர்சனம் செய்து இருந்தார். மழையில் சாலையில் ஏற்பட்ட குழி ஒன்றில் கார் கவிழ்ந்து இருக்கும் புகைப்படம் ஆகும் இது.
சாலையில் உள்ள பெரிய குழியில் அம்பாசிடர் கார் ஒன்று உள்ளே கவிழ்ந்து கிடக்கும் புகைப்படத்தை பகிர்ந்து சாலைகளின் அவலநிலையை கிண்டலாக எஸ்.வி சேகர் விமர்சனம் செய்து இருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

கமெண்ட்
இந்த புகைப்படத்தை பகிர்ந்து வாகனங்களின் என்ஜின் சூடு குறைப்பதற்கு சாலைகளில் ஆங்காங்கே வசதி செய்யப்பட்டுள்ளது, பொதுமக்கள் பயன்படுத்துமாறு நெடுஞ்சாலை துறையினரால் கேட்டுக்கொள்ளபடுகிறது, என்று எஸ். வி சேகர் கிண்டலாக காமெடி போல குறிப்பிட்டு இருந்தார்.

பகிர்ந்தார்
இந்த நிலையில் இதே ட்வீட்டை பகிர்ந்து திமுக அரசின் புதிய திட்டம் என்று கூறி பாஜக உறுப்பினர் நாராயணன் திரிப்பாதி விமர்சனம் செய்தார். அதாவது திமுக ஆட்சிக்கு கீழ் சாலை மோசமாக இருப்பதாக கூறி நாராயணன் திரிப்பாதி விமர்சனம் செய்தார். உண்மையில் நாராயணன் திரிப்பாதி பகிர்ந்த புகைப்படம் 4 ஆண்டுகள் பழமையான புகைப்படம் ஆகும். 2017ல் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும் இது.

எங்கே
அதோடு திமுக ஆட்சியிலோ, தமிழ்நாட்டிலோ எடுக்கப்பட்ட புகைப்படம் கிடையாது இது. இது மும்பையில் மழை, வெள்ளம் ஏற்பட்ட போது நெட்டிசன்கள் கிண்டலாக வெளியிட்ட புகைப்படம் ஆகும். அந்த பழைய மும்பை புகைப்படத்தை வெளியிட்டு நாராயணன் திரிப்பாதி, திமுக அரசின் திட்டம் என்று விமர்சனம் செய்து இருந்தார்.

நெட்டிசன்கள்
இந்த நிலையில்தான் நாராயணன் திரிப்பாதியின் ட்வீட்டிற்கு நெட்டிசன்கள் பலர் கடுமையாக விமர்சனம் வைத்துள்ளனர். ஏன் இப்படி பொய்யான செய்தியை பரப்புகிறீர்கள். ஏன் வேண்டுமென்றே தவறான தகவலை பரப்பி வரலாற்றை, உண்மையை திரிக்க முயற்சி செய்கிறீர்கள். இந்த மாதிரி பொய் சொல்லி / பேசி / எழுதி காலத்தை ஒட்டிய வரலாறு எல்லாம் மலையேறி விட்டது, என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

ஏன் இப்படி?
இன்னும் சில நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தின் உண்மை பின்னணியை பகிர்ந்து வருகிறார்கள். இது 4 வருடத்திற்கும் முன் எடுக்கப்பட்ட புகைப்படம். இதை தேவையின்றி பரப்பி வருகிறார்கள். உண்மையான படம் மும்பையில் எடுக்கப்பட்டது என்று ஆதாரத்துடன் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்!












Click it and Unblock the Notifications