Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏன் இப்படி நடக்க விட்டீங்க? அண்ணாமலைக்கு போன போன்! கடிந்து கொண்ட மேலிடம்! அதிமுக முடிவால் பாஜக ஷாக்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக-பாஜக கூட்டணி முறிந்தது என எடப்பாடியின் உத்தரவின் பேரில் நேற்று அழுத்தமாக தெரிவித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இந்த அறிவிப்பிற்கு முன்னும் பின்னும் நடந்த பல்வேறு சம்பவங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. முக்கியமாக தேசிய பாஜக தலைவர்கள் இந்த கூட்டணி முறிவை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் மெகா கூட்டணி அமைப்போம். மெகா கூட்டணி அமைத்து திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கடந்த சில மாதங்களுக்கு முன் கூட்டம் ஒன்றில் முழக்கமிட்டு இருந்தார். அவர் எப்போது சொன்னாரோ அப்போதில் இருந்தே பாஜக கூட்டணியில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்ட வண்ணம்தான் உள்ளது.

BJP national leaders are not happy with Annamalai due to AIADMK alliance breakage

சமீப நாட்களாக நடக்கும் விஷயங்களை பார்த்தால் எங்கே அதிமுக மெகா கூட்டணி மட்டுமல்ல சாதாரண சின்ன கூட்டணியே கூட அமைக்க முடியாமல் போய்விடுமோ என்று எண்ண தோன்றுகிறது. ஏற்கனவே தேமுதிக, பாமக கூட்டணி அதிமுகவுடன் முறிந்த நிலையில் தற்போது பாஜக - அதிமுக கூட்டணியும் முறிந்துள்ளது.

அதிமுக - பாஜக கூட்டணி முறிந்ததாக அதிமுக அறிவித்து உள்ளது. அண்ணாமலையின் தொடர் பேச்சுக்கள்தான் இந்த கூட்டணி முறிவிற்கு காரணம் ஆகி உள்ளது.

அதிமுக பாஜக இடையே தற்போது உச்சம் அடைந்து உள்ளது. தற்போது முத்துராமலிங்கத் தேவருக்கு பயந்து ஓடியவர் அண்ணா என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வைத்த விமர்சனத்தில், எப்பேர்பட்ட அரசியல் கட்சிக்கு தலைவராக இருந்தாலும் சரி, மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது

அண்ணாவை பற்றி அவதூறாக பேசினால் பேசுபவர்களின் நாக்கு அழுகிவிடும் என்று செல்லூர் ராஜு காட்டமாக பேசி உள்ளார்.

இன்னொரு பக்கம் மாஜி அமைச்சர் சிவி சண்முகம் வைத்த விமர்சனத்தில், அண்ணாமலை செல்வது பாதயாத்திரை இல்லை வசூல் யாத்திரை. மோடி மீண்டும் பிரதமராவதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை. அதனால்தான் அண்ணாமலை இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார், என்று சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

பதிலடி: இதற்கு அண்ணாமலை கொடுத்த பதிலடியில், சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார். 6 மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார். கடும் சொற்களை எனக்கும் பயன்படுத்தத் தெரியும். 10 ஆண்டுகளாக துப்பாக்கி பிடித்த கை இது. நேர்மையாக இருப்பவன் நான். சிவி சண்முகம் எனக்கு பாடம் எடுக்கக் கூடாது என்று கடுமையாக பேசினார். இந்த பேச்சுதான் கூட்டணி முறிவிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

கூட்டணி முறிவு: இதையடுத்தே அதிமுக-பாஜக கூட்டணி முறிந்தது என எடப்பாடியின் உத்தரவின் பேரில் நேற்று அழுத்தமாக தெரிவித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இந்த அறிவிப்பை தமிழ்நாடு முழுவதும் ஸ்வீட் கொடுத்து உற்சாகமடைந்தனர் அதிமுகவினர். பாஜகவையும் அண்ணாமலையையும் அதிமுக கடுமையாக விமர்சித்த நிலையில், பாஜக நிர்வாகிகளும் அதிமுகவை விமர்சித்தனர்.

BJP national leaders are not happy with Annamalai due to AIADMK alliance breakage

இந்த நிலையில், நேற்று இரவு, அண்ணாமலையை தொடர்புகொண்டு கடிந்து கொண்டிருக்கிறார் பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ். ஏன் இப்படி கூட்டணி முறியும் நிலைக்கு கொண்டு சென்றீர்கள் என்றுள்ளார். மேலும், தமிழக பாஜகவின் மேலிட நிர்வாகிகளை தொடர்பு கொண்டும் பேசியுள்ளார் சந்தோஷ். இதனையடுத்து, "அதிமுக-பாஜக கூட்டணி பாறை போல உறுதியுடன் இருக்கிறது" என்று திருப்பதி நாராயணன் பதிவு செய்துள்ளார்.

"கூட்டணி குறித்து யாரும் பேசக்கூடாது. கூட்டணியை பற்றி கட்சி தலைமை முடிவெடுக்கும். அதனால், கூட்டணியை யாரும் விமர்சிக்கக்கூடாது" என்று தமிழக பாஜகவினருக்கு கரு.நாகராஜனும் பதிவு செய்துள்ளனர்.

ஆக, கூட்டணி குறித்து தமிழக பாஜக பேசுவதற்கு பாஜக மேலிடம் தடை விதித்துள்ளது என்கிறார்கள் பாஜக மேலிட வட்டாரங்கள். இந்த கூட்டணி முறிவை டெல்லி மேலிடம் பெரிதாக ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் டெல்லி பாஜக வட்டாரம் அதிமுகவிடம் இது தொடர்பாக சமாதான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+