சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கருணாநிதி சிலை குறித்து ஹெச் ராஜாவின் சர்ச்சை டுவீட்.. கொதித்தெழுந்த நெட்டிசன்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஹெச் ராஜாவின் சர்ச்சை டுவீட், கொதித்தெழுந்த நெட்டிசன்கள்

    சென்னை : கருணாநிதி சிலை திறப்பு குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்டு உள்ள அந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னையில் இன்று நடைபெறும் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்ச்சியில், ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையும், புதுப்பிக்கப்பட்ட அண்ணா சிலையும் இன்று திறக்கப்படவுள்ளன. அதனை தொடர்ந்து, ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி மக்கள் விரும்புகிறார்கள்.. எச்.ராஜா புதிய சர்ச்சை ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி மக்கள் விரும்புகிறார்கள்.. எச்.ராஜா புதிய சர்ச்சை

    குவியும் தலைவர்கள்

    குவியும் தலைவர்கள்

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் சென்னைக்கு வருகின்றனர்.

    சர்ச்சையான பதிவு

    சர்ச்சையான பதிவு

    இந் நிலையில், கருணாநிதி சிலை திறப்பு குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்டு உள்ள அந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த பதிவில் ஹெச்.ராஜா கூறியிருப்பதாவது .

    கேள்வி எழுப்பிய ஹெச். ராஜா

    அந்த பதிவில், உயிரற்ற படேலுக்கு சிலையா என்று நேற்று கேள்வி எழுப்பினார்கள் நாளை? என்று கூறியுள்ளார். தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களையும், சர்ச்சைக்குரிய ட்விட்களையும் வெளியிட்டு வரும் பாஜக தேசிய செயலாளர்களில் ஒருவரான எச்.ராஜா தற்பொழுது மறைமுகமாக கருணாநிதி சிலை திறப்பு விழாவை சாடும் வகையில் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    ஹெச். ராஜாவுக்கு கண்டனம்

    சர்ச்சையையும், விமர்சனத்தையும் எழுப்பியுள்ள இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் ஹெச்.ராஜாவை வறுத்து தள்ளிவிட்டனர். இன்னும் சிலரோ, படேலின் சிலை மக்களின் வரிப்பணத்தில் நிறுவப்பட்டது என்றும், ஆனால் சென்னையில் கருணாநிதி சிலை திமுகவின் சொந்த பணத்தில் கட்சியினரின் செலவில் நிறுவப்பட்டுள்ளது என்று பதிலடி கொடுத்துள்ளனர்.

    ஹெச்.ராஜாவுக்கு தகுதியில்லை

    கருணாநிதியை பற்றி பேச பாஜகவுக்கோ, ஹெச். ராஜாவுக்கோ தகுதி இல்லை என்றும் விரைவில் அவர்கள் ஆட்சி மத்தியில் முடியும் போது என்ன நடப்பது என்பது அனைவருக்கும் என்றும் காட்டமாக பதிலளித்துள்ளனர்.

    விளக்கம் தருவாரா?’

    மேலும் பலர், தமிழகத்தில் பாஜகவை சீண்டுவோர் யாருமில்லை என்பதால், இவ்வாறு எழுதியிருப்பதாக பொரிந்து தள்ளிவிட்டனர். ஆக ஒவ்வொரு முறையும் ஏடாகூடமான கருத்துகளை பதிவிட்டு விட்டு, பின்னர் தாம் அவ்வாறு கூறவில்லை என்று வழக்கமான அரசியல்வாதி போன்று பதிலளிப்பாரா அல்லது வேறு ஏதேனும் விளக்கம் கொடுப்பாரா என்று பார்ப்போம்...

    English summary
    H.Raja, BJPs one of the national secretary and leading personality express his views of karuanithis statue in Chennai.Its makes an issue in dmk cadres and public.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X