"விடமாட்டோம்" ஆ.ராசாவை.. மேலிடம் வரை பறக்கும் புகார்.. "அவரிடம்" நேரிலேயே செல்கிறோம்: ஹிந்து முன்னணி

ஆ ராசா மீது நடவடிக்கை கோரி, தமிழக பாஜக சார்பில் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய ஆ.ராசாவை திமுகவில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக போர்க்கொடி உயர்த்திய உள்ள நிலையில், இந்து முன்னணியும் அதே கோரிக்கையை வைத்துள்ளது.. அத்துடன் டெல்லி சென்று முறையிட போவதாகவும் தெரிவித்துள்ளது.

ஆ.ராசா பேசிய வீடியோ ஒன்றை மாநில தலைவர் அண்ணாமலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்..

இதற்கு பாஜக தரப்பு கேள்வி எழுப்பி வருகிறது... அத்துடன் அண்ணாமலை உட்பட பல்வேறு இந்து மத தலைவர்கள் இதற்கு கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

 விபச்சாரி மகன்

விபச்சாரி மகன்

அதில், "தனித் தமிழ்நாடு கேட்டார் பெரியார். ஆனால், பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட திமுக அதில் இருந்து விலகி ஜனநாயகத்துக்காக, இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்... சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன். இந்துவாக, இருக்கும் வரை நீ தீண்ட தகாதவன். எத்தனை, பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்" என்று ராசா பேசியிருக்கிறார்.. இதற்கு தமிழக பாஜக, சென்னையில் டிஜிபியிடம் புகார் தந்துள்ளது.

 கரு.நாகராஜன்

கரு.நாகராஜன்

செய்தியாளர்களிடம் பேசிய, பாஜக மூத்த தலைவர் கரு.நாகராஜன், "நீ இஸ்லாமியனாக பிறந்தால், நல்ல தாய் பெற்ற மகன்.. நீ கிறிஸ்துவனாக இருந்தால் நல்ல தாய் பெற்ற மகன்.. ஆனால் நீ இந்துவாக இருந்தால் விபச்சாரியின் மகன் என்று பொதுமேடையில் சுட்டிக்காட்டி பேசுகிறார்.. இதைவிட ஒரு கேவலம் இந்து மக்களுக்கு, ஆன்மீகம் தழைத்த இந்த பூமிக்கு, தமிழக மக்களுக்கு, பக்தர்களுக்கு, கடவுளை வணங்குபவர் ஒவ்வொருவருக்கும் இதைவிட வேறு அவமானம் இருக்க போவதில்லை..

திருநீறு

திருநீறு

தமிழக முதல்வர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.. திமுகவை விட்டே அவரை நீக்க வேண்டும்.. இல்லாவிட்டால் ஸ்டாலின் சொல்லித்தான் அவர் இப்படி பேசுகிறார் என்று அர்த்தம் கொள்ளப்படும்.. வடமாநிலங்களில், பாஜகவில் ஒருசிலர் இப்படி பேசுகிறபோது, அவர்களை அங்கு சஸ்பெண்ட் செய்துவிடுகிறார்கள்.. இதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.. மக்களை ஏமாற்றி பிழைத்ததெல்லாம் போதும்.. நீ அரசியல் மட்டும் செய்.. கடவுளை நிந்திப்பவன் என்னைக்குமே நல்லா வாழ முடியாது.." என்றார்.

 காடேஸ்வரா சுப்ரமணியம்

காடேஸ்வரா சுப்ரமணியம்

இப்படி பாஜக தரப்பில் அனைவரும் கொந்தளிப்பில் இருக்கும்போது, இந்து முன்னணியோ ஒரு படிமேலேபோய், ஜனாபதியிடமே புகார் கொடுக்க போவதாக சொல்லி உள்ளார்கள்.. அக்கட்சியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில், "நீலகிரி எம்பி ராஜா, தொடர்ந்து ஹிந்து மத நம்பிக்கைகளையும், ஹிந்துக்களையும் கொச்சைப்படுத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த விழாவில் எம்பி ராஜா, ஹிந்துக்கள் குறித்து இழிவாக பேசினார்.

 காப்பு பிரமாணம்

காப்பு பிரமாணம்

பதவியேற்கும் போது, எந்த மதத்தையும் இழிவுபடுத்த மாட்டேன் என்றும், யாருக்கும் பாரபட்சமாக நடக்க மாட்டேன் என்றும் காப்பு பிரமாணம் செய்து விட்டு, ஹிந்து மதத்தை தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறார். அம்பேத்கரால் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்க மாட்டேன் என்கிறார் ராஜா. தனது கட்சியின் அரசியல் லாபத்திற்காக, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி மக்களிடையே பிரிவினையையும், வெறுப்புணர்வையும், தொடர்ந்து இதுபோன்று பேசி வரும் இவர், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

 90% ஹிந்துக்கள்

90% ஹிந்துக்கள்

தமிழக முதல்வர் ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தில், திமுகவில் 90 சதவீதம் ஹிந்துக்கள் இருப்பதாக சொன்னார்.. ஆனால், ஆட்சி அமைத்த பிறகு, திமுக அரசு எந்த மதத்தையும் சார்ந்து ஆட்சி புரியாது, யாரையும் புண்படுத்தாது என்று கூறியதை ஏற்க மறுக்கிறாரா? இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும், காப்பு பிரமாணத்தையும் காற்றில் பறக்க விட்டு, தான்தோன்றித்தனமாக செயல்படும் எம்பி ராஜாவின் பதவியை பறிக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் முறையிட உள்ளோம்" என்று இந்து முன்னணி தலைவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+