யார் அந்த பெண்? ராகுல் போட்டோவை பகிர்ந்து பாஜக "நிர்மல்" கமெண்ட்.. கதறு.. டெல்லியில் எகிறிய பிரஷர்
சென்னை: பாஜக தமிழ்நாடு மாநில ஐடி விங் தலைவர் சிடிஆர் நிர்மல் குமார், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை விமர்சனம் செய்து வெளியிட்ட போஸ்ட் சர்ச்சையாகி உள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் எம்பி ராகுல் காந்தி மிக நீண்ட யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். 11வது நாளான இன்று ராகுல் காந்தி ஆலப்புழாவில் இருந்து தனது யாத்திரையை தொடங்கினார்,. இன்று 20-30 கிமீ தூரத்திற்கு ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல் காந்தியின் இந்த யாத்திரை தேசிய அளவில் கவனம் பெற தொடங்கி உள்ளது. தினமும் இவரின் யாத்திரையில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் கலந்து கொள்ள தொடங்கி உள்ளனர். அதோடு இவர் ஊர் ஊராக சென்று யாத்திரை செய்வதால் மக்களை அதிக அளவில் பார்க்கிறார்.

சிடிஆர் நிர்மல் குமார்
இந்த நிலையில்தான் பாஜக தமிழ்நாடு மாநில ஐடி விங் தலைவர் சிடிஆர் நிர்மல் குமார், ராகுல் காந்தியை விமர்சனம் செய்து போஸ்ட் செய்துள்ளார். அதில் "குழந்தைகளுடன் மருதாணி வைத்து விளையாடும் இந்த #pappu-வை கூட்டிக்கொண்டு யாத்திரை போகும் அந்த 10 பேரை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது.. " என்று குறிப்பிட்டு இருக்கிறார். ராகுல் காந்தி சிறுமி ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து நிர்மல் குமார் விமர்சனம் செய்துள்ளார். அவரின் இந்த விமர்சனம் சர்ச்சையாகி உள்ளது.

காங்கிரஸ் கண்டனம்
இவரின் இந்த விமர்சனம் கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இவரின் விமர்சனம் ஆபாசமாக இருப்பதாகவும், சிறுமியுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்து உள்ளார் என்றும் விமர்சனம் வைக்கப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் நிர்வாகிகள் பலர், உன் வீட்டு பெண்களை நினைத்தால் பாவமா இருக்கு. எல்லோருமே உன்னை போன்ற மிருகத்திடம் இருந்து பாதுகாப்பா இருக்கனும். பாரத்ஜோடோயாத்திரை இன் வெற்றி உன்னை மாதிரி சங்கீகளை கதற வெச்சிருக்கு. கதறு என்று கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.

தேசிய அளவில் டிரெண்ட்
தமிழ்நாட்டில் மட்டுமின்றி தேசிய அளவிலும் இந்த விவகாரம் சர்ச்சையாகி உள்ளது. சிறுமி ஒருவருடன் ராகுல் காந்தி இருப்பதை கூட இவர்கள் கேவலமாக விமர்சனம் செய்கிறார்கள். என்ன கொடுமை இது என்று பலரும் விமர்சனம் செய்துள்ளனர். அதோடு சிலர் இவர் தமிழில் போட்டு இருக்கும் ட்வீட்டிற்கு ஆங்கில மொழிபெயர்ப்பு கேட்டு விமர்சனம் செய்து வருகின்றனர். வடஇந்தியாவை சேர்ந்து காங்கிரஸ் தலைவர்கள், டெல்லியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் பலர் இந்த ட்வீ ட்டை விமர்சனம் செய்துள்ளனர்.

யார் அவர்?
அந்த போட்டியில் ராகுல் காந்தியுடன் இருக்கும் அந்த பெண் பிரியங்கா காந்தியின் மகள் மிராயா. ராகுல் காந்தி அவருக்கு தாய் மாமன் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த ராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் 2015 ஆம் ஆண்டு இவர்கள் குடும்பத்தோடு சந்தித்த போது இந்த படம் எடுக்கப்பட்டது. அந்த படம் எடுக்கப்பட்ட போது அவருக்கு வயது 13 மட்டுமே. மைனரின் புகைப்படத்தை இணையத்தில் இப்படி பரப்புவது தவறு என்ற போதிலும் பாஜக நிர்வாகி அதை பகிர்ந்து கிண்டல் செய்துள்ளார்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications