Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடிக்கு 16.. பன்னீர்செல்வத்திற்கு 8.. +கமல் +டிடிவி.. மோடி போடும் தமிழக கணக்கு? பிளான் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் 15 -16 இடங்களை எடப்பாடிக்கு கொடுக்க வேண்டும். 8 இடங்கள் வரை ஓ பன்னீர்செல்வத்திற்கு கொடுக்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

திமுக பாஜக கூட்டணி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியது தமிழக அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. சமீபத்தில் பேசிய சி வி சண்முகம், திமுக - பாஜக காட்சிகள் கூட்டணி வைக்க போகின்றன. இவர்கள் கருப்பு துண்டு. அவர்கள் காவி துண்டு. ஆனா ரெண்டுமே ஒன்னு தான். திமுக - பாஜக கூட்டணி வைக்க போகிறார்கள், என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் அதிமுக - பாஜக மோதல் தொடர்பான விவாதங்கள் தமிழக அரசியலில் எழுந்துள்ளது.அதிமுக + பாஜக கூட்டணி மொத்தமாக முறிகிறதா என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டி பின்வருமாறு..

பேட்டி

பேட்டி

கேள்வி: அதிமுகவில் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓபிஎஸ் சொல்கிறார்.. ஆனால் இதை எடப்பாடி ஏற்றுக்கொள்வாரா? தேர்தல் நேரத்தில் என்ன நடக்கும்?

பதில்: அதற்குத்தான் நான் ஒரு பார்முலா சொல்கிறேன். லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் 15 -16 இடங்களை எடப்பாடிக்கு கொடுக்க வேண்டும். 8 இடங்கள் வரை ஓ பன்னீர்செல்வத்திற்கு கொடுக்க வேண்டும். 50 - 50 என்பதற்கு எடப்பாடி சம்மதிக்க மாட்டார். அதனால் 8 இடங்களை ஓ பன்னீர்செல்வத்திற்கும் 15 இடங்களையும் எடப்பாடிக்கு கொடுக்கலாம். இதை ஏற்றுக்கொண்டு எடப்பாடி இறங்கி வர வேண்டும். மற்ற இடங்களை டிடிவி தினகரன், கமல்ஹாசன் வந்தால் அவருக்கு கொஞ்சம் சீட்டுகள், அதிமுகவிற்கு பாமக வந்தால் அவருக்கு கொஞ்சம் சீட்டுகள் என்று கொடுக்கலாம். இதை எல்லாம் வைத்து பாஜக + அதிமுக கூட்டணி உருவானால் வேண்டுமென்றால் திமுகவிற்கு அவர்கள் போட்டியாக இருக்க முடியும். ஆனால் எடப்பாடி இதை ஏற்றுக்கொள்வதாக தோன்றவில்லை. அவர்கள் அதிருப்தியில் பாஜக + திமுக கூட்டணி அமைய போவதாக சிவி சண்முகம் போன்றவர்கள் பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

பாஜக பிளான்

பாஜக பிளான்

கேள்வி: பாஜகவின் இந்த கூட்டணி திட்டத்தை எடப்பாடி ஏற்க மாட்டார் என்றால், எடப்பாடியின் மெகா கூட்டணிக்கு யார்தான் வருவார்?

பதில்: எடப்பாடியால் மெகா கூட்டணி எல்லாம் உருவாக்க முடியாதே. ஸ்டாலினால் எம்பி ஆகி, ஸ்டாலினால் எம்எல்ஏ ஆன விசிக, காங்கிரஸ் எப்படி ஸ்டாலினை விட்டு வருவார்கள். இந்துத்துவா காரணமாக அதிமுக வாக்கு சரிந்துவிட்டதாக எடப்பாடி மீது காங்கிரஸ், விசிக புகார் வைக்கிறது. அப்படி இருக்கையில் எடப்படியுடன் இவர்கள் எப்படி கூட்டணி வைப்பார்கள். அவருடன் செல்ல விசிக, காங்கிரஸ் தயாராக இல்லை என்பதே என் கருத்து.

 எடப்பாடி ஏற்க மாட்டார்

எடப்பாடி ஏற்க மாட்டார்

கேள்வி: அப்படி என்றால் எடப்பாடிக்கு வேறு ஆப்ஷன் இல்லை.. அவர் பாஜகவுடன் செல்வதுதான் ஒரே வழி என்கிறீர்களா?

பதில்: எடப்பாடி நினைத்தால் தனித்து கூட நிற்பார். எடப்பாடியை குறைத்து மதிப்பிட கூடாது. எடப்பாடி நினைத்தால் தனித்து போட்டியிடுவார். விசிக என்ன நடந்தாலும் திமுகவுடன்தான் நிற்கும். காங்கிரஸ் கட்சியும் திமுகவுடன்தான் நிற்கும். இதனால் அதிமுக தனித்து நிற்க கூட ரெடியாகி இருக்கும். ஏனென்றால் பாஜகவுடன் மீண்டும் சேர்ந்தால் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்களின் வாக்குகள் நமக்கு நிரந்தரமாக எதிராக திரும்பி விடும் என்று எடப்பாடி நினைக்கிறார். நிரந்தரமாக இந்த வாக்குகள் நமக்கு எதிராக என்று எடப்பாடி நினைக்கிறார். அதனால் பாஜகவை கழற்றிவிட எடப்பாடி நினைக்கிறார். பாஜகவை எதிர்த்தால் காங்கிரஸ், விசிக தங்கள் பக்கம் வரும் என்று எடப்பாடி நினைக்கிறார். ஆனால் எடப்பாடிக்கு 15% வாக்குகள்தான் இருக்கிறது என்பதால் அவர் பக்கம் யாரும் வர மறுக்கிறார்கள்.

15 சதவிகித வாக்கு

15 சதவிகித வாக்கு

கேள்வி: எடப்பாடிக்கு 15 சதவிகித வாக்குகள்தான் இருக்கிறது என்பதை அவர் ஒப்புக்கொள்வாரா?

பதில்: எடப்பாடி அதை ஒப்புக்கொள்ள மாட்டார். அவருக்கு அவரின் பலம் தெரியவில்லை. ஆனால் மோடிக்கு தெரியும். மோடியின் நடவடிக்கைகள் இதைத்தான் காட்டுகிறது. விசிக, காங்கிரஸ், பாமக இவை எல்லாம் எடப்பாடி பக்கம் போக யோசிப்பதற்கு காரணம் இதுதான். இவர்கள் எல்லாம் இல்லாமல் எடப்பாடி எப்படி கூட்டணி வைப்பார்? யாரை வைத்துக்கொண்டு கூட்டணி வைப்பார்? நாம் தமிழரும் எடப்பாடியுடன் சேர மாட்டார்கள்.

அண்ணாமலை கொங்கு

அண்ணாமலை கொங்கு

கேள்வி: அண்ணாமலையை கொங்கில் பாஜக வளர்த்துவிடுவதால் எடப்பாடி வருத்தத்தில் இருக்கிறாரா?

பதில்: நிச்சயமாக எடப்பாடிக்கு இந்த வருத்தம் இருக்கும். அண்ணாமலையை தலைவராக போட்டதே எடப்பாடிக்கு சிக்கல்தான். எடப்பாடி இடத்தை கொங்கில் பிடிக்கத்தான் அண்ணாமலையை பாஜக களமிறங்கினார்கள். அதுதான் அரசியல். அவர் இளைஞர், வெள்ளாள கவுண்டர், மோடிக்கு நெருக்கமானவர், நேர்மையான அதிகாரி, ஐபிஎஸ் என்றெல்லாம் பாஜக பார்க்கிறது. எடப்பாடிக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று புது ஆளாக அண்ணாமலையை இறக்கி உள்ளார். எடப்பாடி இதனால் அதிருப்தியில்தான் இருக்கிறார். எடப்பாடி இதனால் கவனமாக இருக்க வேண்டும். அவர் கவனமாக இருக்கிறார், என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+