“3-2” எடப்பாடி முன்னிலை! நெருங்கும் 2024 தேர்தல் - பாஜகவின் “மெகா” பிளான் - அப்ப ஓபிஎஸ் நிலை
சென்னை: எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில் டெல்லி 2024 தேர்தலை மனதில் வைத்து மெகா திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவால் எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி பறிபோனது.
ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை எடப்பாடி பழனிசாமி அமர்வு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற இருவர் அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இதனால் மீண்டும் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆகியுள்ளார்.

ஓபிஎஸ் ஆலோசனை
இந்த நிலையில் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து தீவிர ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டு இருக்கிறார். தீர்ப்பு எதிராக வந்தாலும் சட்டப்போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்து இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடனும் அலோசனை மேற்கொண்டும் வரும் பன்னீர்செல்வம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

ஆதரவாளர்கள்
அதே நேரம் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தால் தங்களிடமும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி அவர் தரப்பு கேவியட் மனுத் தாக்கல் செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பால் உற்சாகத்தில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தற்போது சோர்வடைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாறும் தீர்ப்புகள்
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பாக இதுவரை உயர்நீதிமன்றம் 5 தீர்ப்புகளை வழங்கி இருக்கிறது. இதில் முதல் தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாகவும் 2 வது தீர்ப்பு ஓபிஎஸுக்கு சாதகமாகவும் 3 வது தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாகவும் 4 வது தீர்ப்பு ஓபிஎஸுக்கு சாதகமாகவும் கடைசியாக வெளியான 5 வது தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாகவும் வந்துள்ளதால் நடப்பது என்னவென்றே தெரியாமல் இரு தரப்பினரும் குழப்பத்தில் உள்ளனர்.

டெல்லியின் பிளான்
இது போன்ற நெருக்கடியான சூழல் இரண்டு தலைவர்களும் தங்களின் ஆதரவாளர்களிடம் டெல்லியை நோக்கியே கைகாட்டுகிறார்கள். ஆனால் டெல்லியின் திட்டமோ வேறாக இருக்கிறதாம். 2024 தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுகவில் எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா அணிகள் பிரிந்து நின்றால் வாக்குகள் சிதறும் என்று உணர்ந்த டெல்லி,
அதிமுகவும் கூட்டணி அமைத்து மொத்த வாக்குகளையும் பெறுவதற்கு மூவரும் ஒன்றாக வேண்டும் என்றே விரும்புகிறதாம். கடந்த முறையும் இதே கணக்கில்தான் எடப்பாடி - ஓபிஎஸை பாஜக சேர்த்து வைத்ததாக கூறப்படுகிறது. என்ன நடக்கிறதென்று பொறுத்திருந்த பார்ப்போம்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications