Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண்களுக்கு ரூ.1000 ஓகே.. ஆனால் அரசு என்ன செய்யனும் தெரியுமா? பாஜக அண்ணாமலை அதிரிபுதிரி கோரிக்கை

28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து ரூ 29 ஆயிரம் வழங்குங்கள்- அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகை வரும் செப்டம்பர் மாதம் முதல் வழங்கும் போது நிலுவைத் தொகையான ரூ 28 ஆயிரத்தை சேர்த்து ரூ 29 ஆயிரமாக வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் 2023-2024 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்றைய தினம் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி இன்று சட்டசபையில் 145 அறிவிப்புகள் வெளியாகின. அதில் அனைவரும் எதிர்பார்த்த அறிவிப்புகள் இரண்டுதான்.

ஒன்று மகளிருக்கு ரூ 1000 உரிமைத் தொகை, மற்றொன்று சிலிண்டருக்கு ரூ 100 மானியம்... இந்த நிலையில் மகளிருக்கு ரூ 1000 உரிமைத் தொகை மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ 7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உரிமைத் தொகை

உரிமைத் தொகை

இந்த நிலையில் இந்த உரிமைத் தொகை தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ 1000 உரிமைத் தொகை வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் கொடுக்கப்படும் என கூறியுள்ளார். இன்னம் 6 மாதங்களில் இந்த திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். சில விதிமுறைகளை வைத்து அதற்குள் வரும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 கிடைக்கும் என தெரிகிறது.

எதிர்க்கட்சிகள் ஆட்சேபம்

எதிர்க்கட்சிகள் ஆட்சேபம்

இதற்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. திமுக தேர்தல் அறிக்கை அனைத்து மகளிருக்கும் ரூ 1000 உரிமைத் தொகை என சொல்லிவிட்டு தற்போது தகுதி வாய்ந்த மகளிருக்கு என மாற்றுவது எந்த விதத்தில் நியாயம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

2 ஆண்டுகளுக்கு பிறகு

2 ஆண்டுகளுக்கு பிறகு

இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்குப் பிறகு, 'மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்' என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி. வரும் செப்டம்பர் மாதம் இந்த தொகை வழங்கப்படும்போது, முதல் தவணையில் இதுவரையிலான 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து, 29000 ரூபாயாக வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

மகளிருக்கு ஆயிரம் 1000

மகளிருக்கு ஆயிரம் 1000

அதோடு தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மடைமாற்றாமல்,தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஏற்கெனவே திமுகவை பல்வேறு விஷயங்களில் பாஜக கேள்வி எழுப்பி வருகிறது. இதற்கு திமுக அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் ரூ 1000 உதவித் தொகை எப்போது என கேட்டு வந்த நிலையில் தற்போது அறிவிதத்தன் மூலம் எதிர்க்கட்சியினரின் வாயை முதல்வர் ஸ்டாலின் அடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தகுதி வாய்ந்த மகளிருக்கு உரிமைத் தொகை

தகுதி வாய்ந்த மகளிருக்கு உரிமைத் தொகை

எனினும் அனைத்து மகளிருக்கும் இல்லாமல் தகுதி வாய்ந்த மகளிருக்கு என குறிப்பிடுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து தமிழக அரசு இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கும் என தெரிகிறது. இது தொடர்பாக ஏற்கெனவே ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்பட்டிருக்கும் என தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+