நன்றியில்லாத சொரி நாய்.. கார்ப்பரேஷன் கூண்டு வண்டி வரும் வரை குரைக்கும்... யாரை சொல்றார் சேகர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில பேருக்கு வாயில் வாஸ்து சரியில்லாவிட்டால் இப்படித்தான்..முன்பு விஜயகாந்த் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசினார்.. சிக்கலில் மாட்டினார்.. அதேபோல இப்போது ஆர்.எஸ். பாரதி தேவையில்லாமல் வாயை விட்டு மாட்டிக் கொண்டு திமுகவுக்கும், தனக்கும் பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளார்.

ஏதோ பேச நினைத்து என்னென்னவோ பேசி பாஜகவினரிடம் சிக்கியுள்ளார். ஊடகங்களும் கூட ஆர்.எஸ். பாரதி பேசிய தேவையில்லாத பேச்சால் கடும் அப்செட்தான். ஒரு பொறுப்பான கட்சியின் முக்கியமான எம்பியான ஆர்எஸ் பாரதி இப்படிப் பேசியது தவறுதான்.

யார் மேலாவது குறை சொல்ல வேண்டுமானால் அவர்களைக் குறிப்பிட்டு திட்டியிருக்கலாம். மாறாக மொத்தமாக பேசப் போய் இப்போது மொத்தமாக வந்து அப்பிக் கொண்டுள்ளனர். அதிலும் கேட்கவே காது கூசக் கூடிய அளவுக்கு திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

துப்பி விட்டுப் போன சேகர்

இதோ எஸ்.வி. சேகரும் வந்து எப்படி திட்டி விட்டுப் போயிருக்கிறார் பாருங்கள். "ஜொள்ளு விட்டு தாலி கட்டி குட்டியெல்லாம் போட்ட பிறகு போட்ட சோத்தை தின்னுட்டு தன் பொண்டாட்டியை நாயேன்னு திட்ட தைரியமில்லாத, நன்றியில்லாத ஒரு சொரி நாய் ரோட்டுக்கு வந்து ஜாதியை சொல்லி திட்டிச்சாம். அது புத்தி அப்படி. கார்ப்பரேஷன் கூண்டு வண்டி வரும் வரை இப்படித்தான் குரைக்கும்"

நாய்னு யாரைச் சொல்கிறார்

நாய்னு யாரைச் சொல்கிறார்

எஸ்வி சேகர் யாரைச் சொல்லியிருக்கிறார் என இரு பிரிவாக பிரிந்து கருத்துக்களைக் குவித்துக் கொண்டுள்ளனர். ஆர் எஸ் பாரதியைத்தான் எஸ்வி சேகர் திட்டியுள்ளார் என பெரும்பாலானவர்களும், இல்லை இல்லை சீமானை என்று சிலரும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். கூடவே திட்டும் வசவும் சரமாரியாக வந்து விழுந்து கொண்டிருக்கிறது. சேகரே இப்படிப் பேசலாமா என்றும் சிலர் உரிமையுடன் கடிந்தும் கொண்டுள்ளனர்.

விதை போட்டதே நீங்கதான்

அதேசமயம் இதுக்கெல்லாம் விதை நீங்க போட்டது என்று எஸ்வி சேகரையும் சிலர் விமர்சிக்கவும் தவறவில்லை. இந்த பதிவர், "கோட்டசாமி அதுக்கு மூல காரணமே நீங்க தான் என்பதை மறந்திடாத" என்று அன்பாக கூறி விட்டுப் போயிருக்கிறார். அதாவது பெண் பத்திரிகையாளர்களை இழிவாகப் பேசினாரே எஸ்வி சேகர். அதைத்தான் இவர் இப்படி சொல்லிவிட்டுப் போயுள்ளார்.

சுய பரிசோதனை

இன்னொருவரும் அதையே மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் இவர் சேகர் போட்ட கருத்தை அவருக்கே திருப்பி விட்டுள்ளார். அதாவது எஸ்.வி.சேகர் தன்னையே சுய பரிசோதனை செய்து கொண்டுள்ளதாக கூறி சேகரை விமர்சித்துள்ளார். ஆக மொத்தம் ஆர்எஸ் பாரதி பேசிய பேச்சால் ஏகப்பட்ட பஞ்சாயத்து ஆகி விட்டது. இனியாவது பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் பார்த்துப் பேச வேண்டும்.. அது எஸ்.வி.சேகருக்கும் கூட பொருந்தும்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+