உச்ச நடிகராக இருக்கும் போதே அரசியலுக்கு வந்தேன்..நானும் விஜய் மாதிரிதான்! நறுக்கென பேசிய சரத்குமார்
சென்னை: விஜய் கூறியது போல் நானும் உச்ச நடிகராக இருக்கும் போது தான் அரசியலுக்கு வந்தேன், பெரிய பெரிய வெற்றிப் படங்களை கொடுத்த நேரத்தில் மக்கள் சேவைக்காக நான் அரசியலுக்கு வந்தேன் எனவும், மாபெரும் தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்தேன் என கூறியுள்ளார் நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார்.
சென்னை பெரியமேட்டில் பாஜக சார்பில் நடைபெற்ற சமத்துவ விருந்தில் கலந்துகொண்ட பிறகு பாஜகவை சேர்ந்தவரும் நடிகருமான சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்," பாஜகவின் ஆட்சியை எவ்வாறு தமிழகத்தில் நிலைநிறுத்த வேண்டும் என்பது தொடர்பான கூட்டம் இது.

பொறுப்புகளை எதிர்பார்த்து நான் பாஜகவில் இணையவில்லை, பொறுப்புகள் வரும்போது என் பொறுப்பு மேலும் அதிகரிக்கும், அரசு மருத்துவரை விக்னேஷ் தாக்கியதை குற்றமாக தான் நான் பார்க்கிறேன். ஆயுதத்தை எடுத்து தாக்கியிருக்க கூடாது.
மருத்துவர்கள் தான் நம் உயிரை காப்பாற்றுவார்கள். இறைவனுக்கு பிறகு மருத்துவர்கள் தான்,எனக்கு கீழே விழுந்து கழுத்தில் அடிபட்டு இன்று நான் நிற்பதற்கு மருத்துவர்கள் தான் காரணம். விக்னேஷ் தாயார் வைத்துள்ள கோரிக்கை குறித்தும் அமைச்சர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை புழக்கம்,காவலரும் போதைக்கு அடிமையாகி இருப்பது எல்லாம் எப்படி கட்டுபடுத்த போகிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின், இப்பொழுது தான் துணை முதலமைச்சர் ஆகியிருக்கிறார். துணை முதலமைச்சர் ஏதாவது செய்திருந்தால் அவரது செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கலாம். என்ன இலக்கு கொடுத்திருக்கிறார்கள் என எனக்கு தெரியாது,கலைஞரின் பேரன்,முதல்வரின் மகனாக இன்று வலம் வந்து கொண்டு இருக்கிறார்,அவர் துணை முதல்வர் ஆகிய பிறகு என்ன செய்திருக்கிறார் என்று சொன்னால் அவரது குறை,நிறைகள் குறித்து சொல்வேன்.
யார் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம். விஜய் அரசியலுக்கு வந்ததை நான் வரவேற்கிறேன்..கட்சி ஆரம்பித்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற எண்ணத்துடன் வருபவர்களை நாம் வரவேற்று தான் ஆக வேண்டும். திராவிடம்,தமிழ் தேசியம் இரண்டும் இரண்டு கண்கள் என்று விஜய் கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது. கொள்கை அடிப்படையில் நான் விமர்சிக்கவும் விரும்பவில்லை,போக போக தான் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்,அவரது கொள்கை என்ன என்று தெரியவரும்.
அவர் பல கூட்டங்களை செய்ய வேண்டும், பத்திரிக்கையாளர்களை சந்தித்து மற்றவர்களை விட இவர் என்ன வித்தியாசமாக திட்டங்கள் வைத்துள்ளார், யாரும் கண்டிராத வகையில் தன்னால் ஆட்சி புரிய முடியும் என்று அழுத்தமாக கூறும் போது தான் அவர் சரியா? தவறா? என்று சொல்ல முடியும். மக்கள் பிரச்சனையை எடுத்துரைத்து விஜய் அரசியல் செய்யணும் என்று நான் நினைக்கிறேன். விஜய் கட்சி ஆரம்பித்ததால் தான் மற்ற கட்சிகள் தற்போதே தேர்தல் வேலையை ஆரம்பித்து விட்டார்கள் என்று சொல்ல முடியாது.
பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு விமர்சனங்கள்,கல்லடி பட தான் செய்யும்,அதை எவ்வளவு திறமையாக விஜய் கையாள்கிறார் என்பதில் தான் உள்ளது. விஜய் கூறியது போல் நானும் உச்ச நடிகராக இருக்கும் போது தான் அரசியலுக்கு வந்தேன். பெரிய பெரிய வெற்றிப் படங்களை கொடுத்த நேரத்தில் மக்கள் சேவைக்காக நான் அரசியலுக்கு வந்தேன். மாபெரும் தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்தேன்.
தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை குறித்து தவெக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இது குறித்து இப்போது தான் விஜய்க்கு தெரிகிறதா? பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர்கள் சிறைப்பிடிப்பு குறைந்துள்ளது,விஜய் தெரிந்துகொண்டு பேச வேண்டும்" என்றார்.
-
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications