எழும்பூர் + கொளத்தூர் + மயிலாப்பூர்.. சென்னையை கொத்தாக குறி வைக்கும் பாஜக.. 8 இடங்களை கேட்க முடிவு?
சென்னை: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்து பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. முக்கியமாக சென்னை மீது தனது அரசியல் கவனத்தை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது. தகவல்களின்படி, சென்னையில் மட்டும் பாஜக மொத்தமாக 8 தொகுதிகளை கட்சி அடையாளம் கண்டுள்ளது.
எழும்பூர், துறைமுகம், ஆயிரம் விளக்கு, கொளத்தூர், மயிலாப்பூர், தியாகராய நகர், வேளச்சேரி மற்றும் விருகம்பாக்கம் ஆகியவையே அந்தத் தொகுதிகள். இதை அதிமுகவிடம் வாங்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறதாம்.

சென்னையை குறி வைக்கும் பாஜக
கூட்டணிக் கணக்குகளிலும், வாக்குகள் பரிமாற்றத்திலும் ஏற்படும் மாற்றங்கள் தங்களுக்குச் சாதகமாக அமையும் என பாஜக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. அதிமுகவின் வாக்கு வங்கி ஆதரவும், சிறிய கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளும் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று பாஜக நினைக்கிறது. அதோடு சென்னையில் வடஇந்தியர்களின் வாக்குகள் அதிகரித்துள்ளது, வேற்று மாநிலத்தவர் வாக்குகள் அதிகரித்து இருப்பது தங்களுக்கு உதவும் என்று பாஜக நினைக்கிறதாம்.
பல தேர்தல்களாக திமுக, அதிமுக போன்ற திராவிடக் கட்சிகளே சென்னையின் அரசியல் களத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. சென்னையில் வென்றால் தமிழ்நாடு முழுக்க வேகமாக வளர தங்களுக்கு உதவும் என்று பாஜக நினைக்கிறது. சென்னையில் அதிமுகவின் முகமாக இருந்தவர்கள் வலிமை இழந்துவிட்டனர்.
பாஜக பிளான்
சென்னையில் தொடர்ந்து அதிமுக தோற்று வருகிறது. இதனால் அந்த இடங்களை எங்களுக்கு கொடுங்கள் என்று பாஜக அதிமுகவிடம் கேட்கும் திட்டத்தில் உள்ளதாம். மயிலாப்பூர், தியாகராய நகர் போன்ற தொகுதிகளில், கடந்த தேர்தல்களில் பாஜக ஒப்பீட்டளவில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருப்பதால், அங்கு தனது தளத்தை மேலும் பலப்படுத்த கட்சி விரும்புகிறது. கொளத்தூர் மற்றும் வேளச்சேரி போன்ற பகுதிகளில், ஆளும் திமுக மீது அதிருப்தி கொண்டவர்கள், நடுநிலை வாக்காளர்களைக் கவர சிறப்பு பிரச்சாரங்களை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளது.
சென்னை பாஜக திட்டம்
பாஜகவின் சென்னை வியூகம், கூட்டணிக் கணக்குகள், வேட்பாளர் தேர்வு மற்றும் களப்பணிகள் ஆகியவற்றை பெரிதும் சார்ந்துள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். நகரத்தில் இடங்களை வெல்வது சவாலாக இருந்தாலும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில், மாநிலத் தலைநகரில் தனது வாக்கு பங்கையும், இருப்பையும் மேம்படுத்த கட்சி உறுதியுடன் உள்ளது.
சென்னையில் வடஇந்தியர்களின் வாக்குகள் அதிகரித்துள்ளது. SIR மூலம் பல வடஇந்தியர்கள் இங்கே சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக சென்னையில் களமிறங்க வேண்டும் என்று பாஜக தீவிரமாக முயன்று வருகிறதாம்.
அமித் ஷா வருகை
தமிழ்நாட்டை குறிவைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தன் தமிழக வியூகம் தொடர்பாக, வாரத்திற்கு ஒருமுறை சென்னைக்கு வந்து தங்குவார் என பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக சென்னையில் ஒரு பெரிய குடியிருப்பு ஒன்றை தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
அமித் ஷா தங்குவதற்கு வசதியாக அவர் இந்த குடியிருப்பை தேர்வு செய்வார் என்கிறார்கள். கிண்டி, அடையார் சுற்றுவட்டாரத்தில் அவருக்கான தற்காலிக குடியிருப்பு தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. மயிலாப்பூர், நங்கநல்லூர் பகுதிகளிலும் குடியிருப்புகளை தேர்வு செய்யும் தேடுதல் வேட்டை சில பாஜக தலைகள் வழியாக தேர்வு செய்யப்பட்டு வருகிறதாம்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டிசம்பர் 15 அன்று தமிழகம் வரவுள்ளார். அவர் சென்னை - வேலூர் செல்லும் வழியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். வரவிருக்கும் தேர்தல்களை கருத்தில் கொண்டு, கூட்டணி விரிவாக்கம் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் தமிழ்நாட்டில் போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகளின் லிஸ்டை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அமித் ஷாவிடம் வழங்குவார். அதில் சென்னையில் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் லிஸ்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா?












Click it and Unblock the Notifications