சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இடைத்தேர்தலுக்கு மட்டும் முக்கியத்துவம் தரும் எடப்பாடி.. எரிச்சலில் பாஜக தலைமை?

Google Oneindia Tamil News

Recommended Video

    மக்களவை தேர்தலை கண்டுகொள்ளாத அதிமுக... எரிச்சலில் பாஜக- வீடியோ

    சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எம்பி தேர்தலை பெரியதாக கண்டுகொள்ளாமல், சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதிலேயே கவனம் செலுத்துவதால் பாஜக தலைமை எரிச்சலில் உள்ளது.

    தமிழகம் மற்றும் புதுவையில் 40 மக்களவை தொகுதிகளுக்கு நாளை மறுநாள் தேர்தல் நடக்க உள்ளது. அதே நாளில் தான் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடக்க உள்ளது.

    இதில் அதிமுக தலைமையில் ஒரு அணியும், திமுக தலைமையில் ஒரு அணியும், அமமுக ஒருஅணியாகவும், நாம் தமிழர், மக்கள்நீதி மய்யம் ஆகியவவை தனியாகவும் களத்தில் உள்ளன. இந்நிலையில் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெல்வதில் தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவனம் செலுத்துவதாகவும், எம்பி தேர்தலை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றும் பாஜக தலைமை அதிருப்தியில் உள்ளது.

    ரஜினியின் அந்த பேச்சால் வந்த மாற்றமா? ஸ்டாலின் பிரச்சாரத்தில் புதிய திருப்பம்.. அதிரடி பிளான்! ரஜினியின் அந்த பேச்சால் வந்த மாற்றமா? ஸ்டாலின் பிரச்சாரத்தில் புதிய திருப்பம்.. அதிரடி பிளான்!

    வடக்கே கடும் போட்டி

    வடக்கே கடும் போட்டி

    வட மாநிலங்களில், காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதிஉள்ளிட்ட கட்சிகள் இந்த முறை கடும் போட்டியை அளிக்கும் என்பதால் தென்மாநிலங்களில் பாஜக அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதனால் தான் தமிழகத்தில் அதிமுக, பாமக, தேமுதிக உடன் பாஜக தலைமை கூட்டணி அமைத்தது.

    பாஜக அதிர்ச்சி

    பாஜக அதிர்ச்சி

    மத்திய உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டில் திமுக காங்கிரஸ் கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என கூறியிருப்பதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக தலைமை, பிரதமர் மோடியை தமிழகத்தின் பல இடங்களுக்கு அழைத்து வந்து பிரச்சாரம் நடத்தியது.

    தெம்பு வரும்

    தெம்பு வரும்

    பிரதமர் மோடியின் வருகையால், கூட்டணி கட்சிகளும், பாஜக வேட்பாளர்ளும் உற்சாகமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மோடியின் வருகை தங்களுக்கு புது தெம்பு அளித்து இருப்பதாக கூறிவருகிறார்கள்.

    அதிக கவனம்

    அதிக கவனம்

    ஜெயலலிதா இருந்திருந்தால், இந்நேரம் அதிமுகவினர் யானை பலத்தோடு களம் இறங்கியிருப்பார்கள். இப்படி ஒரு சிக்கலும் ஆட்சிக்கு வந்திருக்காது. இந்நிலையில் ஜெயலலிதா இல்லாமல் சந்திக்கும் சட்டமன்ற தேர்தல் என்பதால் அதிமுக தலைமை கொஞ்சம் கலகத்ததுடன் உள்ளது. இதனால் அவர்கள் மக்களவை தேர்தலைவிட சட்டமன்ற இடைத்தேர்தலியே அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    பாஜக தலைமை

    பாஜக தலைமை

    இதனை அறிந்த பாஜக தலைமை, மக்களவை தேர்தல் தங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணராமல் அதிமுக இருப்பதை கண்டு அதிர்ச்சியில் உள்ளார்கள். மக்களவை தேர்தலில் உரிய கவனம் செலுத்துங்கள் என்ற கட்டளையை பாஜக தலைமை அதிமுகவுக்கு பிறப்பித்துள்ளது.

    English summary
    lok sabha elections 2019: BJP head shocks over aiadmk gives importance to by election only not lok sabha polls
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X