அயோத்தி ராமர் கோவில் திறப்பு.. மோடி மீது எடப்பாடி பழனிசாமி நேரடி அட்டாக்.. ஆடிப் போன பாஜக!
சென்னை: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்வைத்து பிரதமர் மோடியை நேரடியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருப்பது பாஜகவை ரொம்பவே ஆடிப் போக செய்துவிட்டது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 2-வது பெரிய கட்சியாக அதிமுக இருந்தது. டெல்லியில் "இந்தியா" கூட்டணிக்கு போட்டியாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

விமர்சனமற்ற போக்கு: ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அண்ணா, ஜெயலலிதா என அதிமுக தலைவர்களை அடுத்தடுத்து விமர்சித்து வந்தார். இதனைத் தொடர்ந்தே பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக முடிவெடுத்தது. இதனை எடப்பாடி பழனிசாமி அறிவித்த போது கூட, தற்காலிகமான முடிவாகத்தான் இருக்கும் எனவும் கூறப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில்தான் கடந்த 3 மாதங்களாக அதிமுக- பாஜக இரு கட்சிகளுமே பரஸ்பரம் கடுமையான விமர்சனங்களைத் தவிர்த்தே வந்தன. பாஜகவுக்கு ஆதரவான சில நிலைப்பாடுகளையும் அதிமுக எடுத்து வந்தது. இதனை திமுக கூட்டணி கட்சிகள் சுட்டிக்காட்டி விமர்சித்தும் வந்தன.
பாஜகவின் நம்பிக்கை: அதேபோல அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா குறித்து முன்னர் கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, அதை ஆதரிக்கும் வகையில்தான் கூறியிருந்தார். இதுவும் பாஜகவுக்கு ஒருவித நம்பிக்கையைத் தந்தது. எப்படியும் கடைசிநேரத்தில் அதிமுக, பாஜக கூட்டணிக்கு வந்துவிடும் என்பது அந்த நம்பிக்கை.
மோடிக்கு பதிலடி: ஆனால் சேலத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கோவில் கட்டுவதால் ஓட்டுகள் வந்துவிடாது. அயோத்தி ராமர் கோவிலை திறந்து வைத்ததாலேயே மோடிக்கு எல்லோரும் ஓட்டுப் போடுவார்களா? அப்படியானால் அதிமுக ஆட்சியில்தான் ஏராளமான கோவில்கள் கட்டப்பட்டன; குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டன; அன்னதானம் தொடங்கப்பட்டன. எடப்பாடி சுற்றிய கிராமங்களில் கட்டப்பட்ட கோவில்களுக்காக அன்னப்போஸ்ட்டாக நான் வெற்றி பெற வேண்டும் என கடுமையாக விமர்சித்தார்.
அதிர்ந்து போன பாஜக: பாஜகவுடனான உறவு முறிவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியை முதல் முறையாக கடுமையாக விமர்சித்திருப்பது பாஜகவினரை ரொம்பவே அதிர்ச்சி அடைய வைத்துவிட்டதாம். அதிமுக, கூட்டணிக்கு வரும் என்ற பாஜகவின் நம்பிக்கையை ஒரே அடியாக தகர்த்து எறிந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்பது மூத்த பத்திரிகையாளர்களின் கருத்து.
"இந்தியா" கூட்டணி பிளவு: அத்துடன், "இந்தியா" கூட்டணியில் இருந்து இன்னும் எத்தனை கட்சிகள் வெளியேறுகிறது என பொறுத்திருந்து பார்ப்போம் எனவும் எடப்பாடி பழனிசாமி பொடி வைத்து பேசியிருப்பதும் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. திமுகவுடனான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத நிலையில் காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கை கோர்ப்பதற்கான சாத்தியங்களை மறுக்க முடியாது என்பதை வெளிப்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் இந்த பேட்டி இருக்கிறது என்கின்றன தேசிய ஊடகங்கள்.
-
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
செங்கோட்டையன் பாணியில் களமிறங்கிய சிவி சண்முகம்.. திடீரென எடப்பாடிக்கு எதிராக கொந்தளிப்பது ஏன்? -
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி! -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!












Click it and Unblock the Notifications