சிகரெட் கடை வைத்திருந்தவர் வைகோ மகன்..! அண்ணாமலைக்கு ஆதரவாக தமிழக பாஜக பதிலடி!

வைகோவின் அறிக்கைக்கு நாராயணன் திருப்பதி பதிலடி தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக குறித்தோ, அண்ணாமலை குறித்தோ விமர்சனம் செய்யும் தகுதி, துரோக அரசியல் செய்யும் வைகோவுக்கு கிடையாது" என்று மதிமுக பொதுச்செயலாளருக்கு, தமிழக பாஜகவின் நாராயணன் திருப்பதி பதிலடி தந்துள்ளார்.

முல்லை பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக, சில நாட்களுக்கு முன்பு தேனி கலெக்டர் ஆபீஸ் முன்பு, பாஜக சார்பில் ஒரு போராட்டம் நடந்தது..

இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக வைகோ ஏன் குரல் கொடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

 அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலையின் இந்த கேள்விக்கு நேற்றைய தினம் வைகோ பதிலளித்திருந்தார்.. அணை சம்பந்தப்பட்ட விவரங்களையும், அது தொடர்பாக தான் இதுவரை மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளையும் விரிவாக சொல்லி, ஒரு அறிக்கையாகவே வைகோ வெளியிட்டிருந்தார்.

 வெறும் போலீஸ்

வெறும் போலீஸ்

குறிப்பாக அதில், "முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை ஏற்கெனவே தீர்க்கப்பட்டுவிட்ட ஒன்றாகும்... அணையை உடைக்கலாம் என்று தற்போது கேரள அரசு திட்டம் வகுக்கிறது. அதனை எதிர்த்துத் தமிழக மக்கள் பொங்கி எழுவார்கள். பாஜவில் இப்பொழுது வந்து சேர்ந்திருக்கின்ற அண்ணாமலை, முதலில் வெறும் போலீஸ் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். அவருக்கு தமிழகத்தை பற்றி ஒன்றும் தெரியாது. வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது. இந்தப் பிரச்னையைப் பற்றி அகரம்கூட தெரியாத அண்ணாமலைகள் என் பெயரை உச்சரிக்க எந்த தகுதியும் கிடையாது" என்று வைகோ காட்டமாக கூறியிருந்தார்.

பாஜக

பாஜக

இந்நிலையில் வைகோவின் இந்த பேச்சுக்கு, தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.. அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "பாஜவில், இப்பொழுது வந்து சேர்ந்திருக்கின்ற அண்ணாமலை, முதலில் வெறும் போலீஸ் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். அவருக்கு தமிழகத்தை பற்றி ஒன்றும் தெரியாது. வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது. அண்ணாமலைகள் என் பெயரை உச்சரிக்க எந்த தகுதியும் கிடையாது" : வை.கோ.

 சிகரெட் கடை

சிகரெட் கடை

மதிமுகவில், இப்போது வந்து சேர்ந்திருக்கின்ற துரை வைகோ, முதலில் வெறும் 'சிகரெட் கடை' வைத்து கொண்டிருந்தார். அவருக்கு வைகோவை நம்பி திமுகவை விட்டு வெளியேறி உயிர் நீத்தவர்களுக்கு அவர் செய்த துரோகம் தெரியும். ஆனால், அண்ணாமலைக்கு துரோக அரசியல் தெரியாது. தமிழினத்தை கொன்று குவித்த திமுக என்று கூறிவிட்டு ஒரு எம்.பி பதவிக்காக அதே திமுகவிடம் கட்சியை அடகு வைத்த கேவல அரசியல் வைகோவுக்கு தெரியும். ஆனால், அண்ணாமலைக்கு தெரியாது. '

 வாரிசு அரசியல்

வாரிசு அரசியல்

வாரிசு அரசியல்' என்று ஸ்டாலினை விமர்சனம் செய்து விட்டு ஓட்டு அரசியலுக்காக எதிர்கால முதல்வரே என்று ஸ்டாலினை அழைத்த சந்தர்ப்பவாத அரசியல் தெரியும். ஆனால், அண்ணாமலைக்கு தெரியாது. வாயை மூடி மௌனம் காக்க வேண்டியது வைகோ தானேயன்றி அண்ணாமலை அல்ல. பாஜக குறித்தோ, அண்ணாமலை குறித்தோ விமர்சனம் செய்யும் தகுதி, துரோக அரசியல் செய்யும் வைகோவுக்கு கிடையாது" என்று பதிலடி தந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+