திருமாவளவனை விடுங்க.. மோடி, அமித்ஷா யாராவது சேர் மேல நடந்து பார்த்திருக்கீங்களா.. அண்ணாமலை கேள்வி
திருமாவளவனை சாடி அண்ணாமலை பேட்டி தந்துள்ளார்
சென்னை: மோடியோ, அமித்ஷாவோ சேர் மேல் நடந்துபோய் காரில் ஏறி பார்லிமெண்ட்டுக்கு போவது கிடையாது. அந்த மாதிரி போய்விட்டு கண்ணாடி கூண்டிலிருந்து கொண்டு கல் எறிந்து கொண்டிருக்கிறார் திருமாவளவன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
சென்னை ராஜாஜி சாலையில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். பின்னர் மேளதாளங்கள் முழங்க, தீச்சுடர் ஏந்தி, சாரட் வண்டியில் ஊர்வலமாக வந்து மரியாதை செலுத்தினார்..
அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, விசிக மற்றும் திமுக கட்சிகளை சரமாரியாக சாடினார்.. இதுதான் விசிகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

திருமாவளவன்
"அரசியலமைப்பு சட்டங்களை பாஜக அரசு அவசர சட்டங்கள் மூலமாக அழிக்கிறது... இந்த நிலையில் பாஜகவினர் அம்பேத்கர் நினைவு நாளை போற்றுவது வேதனை அளிக்கிறது என்று திருமாவளவன், பாலகிருஷ்ணன் போன்றோர் கருத்து தெரிவித்துள்ளனரே என்று செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ''திருமாவளவனைப்போல, பாலகிருஷ்ணனைப்போல அம்பேத்கரை வைத்து வியாபாரம் செய்யக்கூடிய கட்சி பாஜக இல்லை. அவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் என்பவர் வியாபாரப் பொருள் மட்டும் தான்.

கட்டாயம்
அதையெல்லாம் தாண்டி எஸ்சி, எஸ்டி சட்டம் என்பது மிக முக்கியமான சட்டம். அந்த சட்டத்தில் காங்கிரஸ் அரசு 10 வருஷமாக சேர்க்கப்படாத விஷயங்களை நாம் ஆட் பண்ணி இருக்கோம். யாரையாவது கட்டாயப்படுத்தி மொட்டை அடிக்க வைத்தால் அது குற்றம்.. ஊர் கிணற்றில் தண்ணீர் எடுக்கத் தடை போட்டால் குற்றம்... இதைப்போன்று புதிதான சில விஷயங்களை கூட அந்த சட்டத்தில் பாஜக கொண்டு வந்திருக்கிறது.

ராம்நாத்கோவிந்த்
முதன்முதலாக பட்டியல் இனத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்த் என்ற அற்புதமான மனிதரை நாட்டின் குடியரசுத் தலைவராக அமர்த்தி அழகு பார்த்த கட்சி இந்த பாஜக. இது போன்ற ஒவ்வொரு விஷயத்தையும் நாம் எடுத்துக்காட்டாக சொல்லிக் கொண்டிருக்க முடியும். அப்படி இருக்கும்போது, அம்பேத்கரை வைத்து வியாபாரம் மட்டும் செய்யக்கூடிய கட்சி திருமாவளவனுடைய கட்சி. குறிப்பாக ஜிஎஸ்டி சட்டத்தைப் பற்றியே தெரியாமல் 5 வருடம் ஜிஎஸ்டி பற்றி பேசியவர் அவர்.

திருமாவளவன்
மறுபடியும் அவர் அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறை முழுமையாகப் படித்துவிட்டு வந்து பாஜக பற்றி குற்றம் சொல்லலாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்... திருமாவளவன் எம்பியாக இருக்கிறார் மோடியோ, அமித்ஷாவோ சேர் மேல் நடந்துபோய் காரில் ஏறி பார்லிமெண்ட்டுக்கு போவது கிடையாது. அந்த மாதிரி போய்விட்டு கண்ணாடி கூண்டிலிருந்து கொண்டு கல் எறிந்து கொண்டிருக்கிறார் திருமாவளவன்..

திமுக அரசு
திமுக அரசு பொறுப்பேற்று 6 மாதங்கள் ஆகின்றன. அரசின் நிர்வாக சீர்கேடுகளால் பிரிவினைவாதம் கஞ்சா விற்பனை, சுரண்டல் லாட்டரி போன்ற சட்ட விரோத செயல்கள் தலைதுாக்கியுள்ளன.. அவற்றை தடுக்க வேண்டும். மக்களின் கோபத்திற்கு தமிழக அரசு ஆளாகியுள்ளது. மே மாதம் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, ஜூன் 21 வரை ஒரு தடுப்பூசி டெண்டர் முறையை கூட வாங்க முடியவில்லை.. வழக்குப் போட்டு முடக்கி விட முடியாது. மத்திய அரசின் முயற்சியால் தான் தற்போது தமிழகம் தடுப்பூசி செலுத்துவதில் முன்னணியில் உள்ளது.

கேரளா
வன்முறையிலும் அராஜக முறையிலும் கேட்டால் தான் தமிழக அரசு செவி சாய்க்கிறது. கேரளாவில் கொரோனா தடுப்பூசி முகாம்களில் பிரதமர் நரேந்திர மோடியின் போட்டோக்கள் இடம் பெற்றுள்ளன... மத்திய அரசின் திட்டங்களில் தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டி தன் திட்டங்களை போல வழங்கி கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் அரசின் திட்டங்களில் ஜனநாயக முறைப்படி முதல்வர் படத்துடன் பிரதமர் படமும் இடம் பெற வேண்டும்...

முடிவு
தமிழக அரசு நிறுவனமான 'எல்காட்' மின்னணு பொருட்களை உற்பத்தி செய்து அரசுக்கு தரமாக வழங்க வேண்டும்... ஆனால் அரசு அந்த நிறுவனத்திடம் இருந்து ஒரு பொருள் கூட வாங்காமல் கமிஷன் கிடைப்பதால் தனியாரிடம் வாங்குகிறது... அதேபோல, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் விரைந்து நடத்த வேண்டும். பாஜக அனைவருக்குமான கட்சி... எந்த ஒரு சமூகத்திற்கும் எதிரான கட்சி கிடையாது.. ஒரு பக்கம் ராமர் கோவிலும் இருக்க வேண்டும்... இன்னொரு பக்கம் இஸ்லாமிய மக்களுக்கு மசூதி இருக்க வேண்டும் என்று விரும்பும் கட்சி" என்றார்.
-
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
INDIA கூட்டணி கூட்டத்தில்.. காங்கிரஸுக்கு எதிராக பேசிய விசிக! தன்னிச்சையாக செயல்படுவதாக கண்டனம் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்!












Click it and Unblock the Notifications