வேலையை காட்டிய பாஜக.. நண்பர்களுக்கு வாரி வழங்கல்! வங்கதேசம், மாலத்தீவுக்கு மோடி செக்! ஆட்டம் ஆரம்பம்
சென்னை: மத்திய பட்ஜெட் என்பது வெறும் வரவு-செலவு கணக்கு மட்டுமல்ல, அது அண்டை நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள உறவையும் பிரதிபலிப்பதாகும்.. ஆனால், இன்றைய பட்ஜெட்டில் அப்படியான உறவுகள் நெருக்கமாக இருப்பது போல தெரியவில்லை.. காரணம், வழங்கப்படும் நிதியுதவியை இந்தியா பாதியாகக் குறைத்துள்ளது. இதுதான் மிகப்பெரிய விவாதமாக கிளம்பி உள்ளது..
வங்கதேசத்தில் அரசியல் சூழலும் சரியில்லை.. அங்குள்ள சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்தபடியே உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில், அந்த நாட்டுக்கு வழங்கப்படும் நிதியுதவியை இந்தியா பாதியாக குறைத்துள்ளது.

வங்கதேசம் இந்தியா உறவு
வங்கதேசத்திற்கு வருடத்துக்கு ஆண்டுக்கு ரூ.120 கோடி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.60 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஒதுக்கப்பட்ட ரூ.120 கோடியில், பதற்றமான சூழல் காரணமாக ரூ. 34.48 கோடி மட்டுமே செலவிடப்பட்டதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது..
பூட்டானுக்கு ரூ. 2,289 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.. நேபாளத்திற்கு ரூ. 800 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு ரூ. 400 கோடி மாலத்தீவுக்கான நிதி 8% குறைக்கப்பட்டு ரூ. 550 கோடியாக உள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு ரூ. 150 கோடி, மியான்மருக்கு ரூ. 300 கோடியும், ஆப்பிரிக்க நாடுகளுக்கு ரூ. 225 கோடியும், லத்தீன் அமெரிக்காவுக்கு ரூ. 120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
வங்கதேச நிதியை பாதியாக குறைத்துள்ளது, அந்த நாட்டின் போக்கிற்கு இந்தியா விடுத்துள்ள ஒரு மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது... அதேசமயம் எப்போதும் இந்தியாவுடன் இணக்கமாக இருக்கும் பூட்டான் நாட்டுக்கு அதிகபட்ச நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.. இது நம்பிக்கைக்குரிய நண்பர்களுக்கு இந்தியா கொடுக்கும் முக்கியத்துவமாகும்..
மாலத்தீவு - நண்பர்கள்
மாலத்தீவு போன்ற நாடுகளுடன் இடையில் சில மனக்கசப்புகள் ஏற்பட்டாலும், அந்த நாடுகளுக்கான நிதியை இந்தியா பெரிய அளவில் குறைக்கவில்லை.. எனவே அண்டை நாடுகளுடன் உறவை முழுமையாக முறித்து கொள்ளவும் இந்தியா விரும்பவில்லை என்றே தெரிகிறது.. அத்துடன் உறவை சீரமைக்க தயாராக இருப்பதையும் உணர்த்துகிறது.
அதேபோல நேபாளம், இலங்கை, மியான்மர் போன்ற நாடுகளுக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்தே வருகிறது..
ஈரானின் சபாஹர் துறைமுக திட்டம்
ஆனால் ஈரானின் சபாஹர் துறைமுக திட்டத்தை பொறுத்தவரை, இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாதது பல விவாதங்களை எழுப்பியுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்காவின் பொருளாதார தடைகள் ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது..
ஈரானின் சபாஹர் துறைமுகத் திட்டத்திற்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாதது பெரும் பேசுபொருளாகியுள்ளது. ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், இந்தியா இந்தத் தற்காலிக முடிவை எடுத்துள்ளது. இருந்தாலும், இந்தத் திட்டத்திலிருந்து இந்தியா விலகவில்லை.
வேலையை காட்டிய பாஜக
அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் சிக்கல் ஏற்படுவதற்கு முன்பே, இந்தியா வழங்க வேண்டிய 120 மில்லியன் டாலர் நிதியை ஈரானிடம் ஏற்கனவே ஒப்படைத்துவிட்டது.
இதன் மூலம் நிதி ஒதுக்கீடு இல்லாமலேயே துறைமுகப் பணிகளைத் தொடர்ந்து தொய்வின்றி நடத்த இந்தியா வழிவகை செய்துள்ளது. பாகிஸ்தானை தவிர்த்துவிட்டு மத்திய ஆசியா மற்றும் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்ய இத்துறைமுகம் இந்தியாவுக்கு மிக அவசியம் என்பதால், ராஜதந்திர ரீதியாக திட்டத்தை இந்தியா தக்கவைத்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications