ஆஹா.. சுப்பிரமணிய சாமி ஏன் இப்படி சொல்றாரு.. இது பாஜகவுக்கு தெரியுமா.. முக்கிய முடிவு வர போகிறதா?
சுப்பிரமணிய சுவாமி பதிவிட்ட ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது
சென்னை: நடுத்தர மக்களுக்கு பயன்படும் வகையில், பாஜக அரசு, முக்கிய அறிவிப்பு ஏதாவது வெளியிட போகிறதா என்று தெரியவில்லை.. காரணம், சுப்பிரமணியன் சாமி போட்ட ட்வீட் பெரும் கவனத்தை பெற்று வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது... பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்தது.
அதேபோல டீசல் விலையும் பல மாநிலங்களில் சதமடிக்க ஆரம்பித்துவிட்டது.. இதன்காரணமாக சரக்கு போக்குவரத்திலும் சிக்கல் ஏற்பட்டது.. செலவு அதிகமாவதால் அத்திவாசிய பொருட்களின் விலையும் உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது.

மதிப்பு கூட்டு வரி
இதையடுத்து, மாநிலங்களும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டிருந்தது...அதன்படி, பாஜக ஆட்சியில் உள்ள 6 மாநிலங்களில் அதாவது, அசாம், திரிபுரா, கர்நாடகா, கோவா, ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியைக் குறைக்கப்போவதாக அறிவித்தன. பெங்களூருவில் மத்திய, மாநில அரசுகளின் அறிவிப்பால், பெட்ரோல் விலை 12 ரூபாயும், டீசல் விலை 17 ரூபாயும் குறைந்துள்ளது...

முடிவுகள்
இப்போது வரையில் மொத்தம் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்கப்பட்டுள்ளன.. ஆனால், பாஜகவின் முக்கிய எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் வாட் வரியை குறைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமலேயே உள்ளது..

ட்வீட்
இந்நிலையில், பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், "காய்கறி விலைகள் உயர்ந்துவிட்டதால், தங்களால் அவ்வளவு விலை கொடுத்து வாங்க முடியவில்லை என்று நடுத்தர மக்கள் நிறைய பேர் தன்னிடம் சொல்லி வருகிறார்கள், எனவே, இதுக்கும் ஒரு தீர்வு விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். இதுதான் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

காய்கறி விலை
காய்கறி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றால், ஒருவேளை பெட்ரோல் டீசல் விலை குறைய போகிறதா? வாட் வரியை குறைக்க பாஜக அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்க போகிறதா? என்று தெரியவில்லை.. சமீபகாலமாக, பெட்ரோல் விலை உயர்வினால்தான், போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டு, காய்கறி விலைகளும் உயர்ந்துவிடும் என்ற அச்சம் எழுந்தது. அதனால், பாஜக ஏதாவது முக்கிய அறிவிப்பை வெளியிட போகிறதா என்று தெரியவில்லை.

பரபரப்பு
அல்லது 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதுபோல, நடுத்தர மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் வேறு ஏதேனும் மக்களுக்கான அறிவிப்பினை வெளியிட திட்டம் இருக்கிறதா என்றும் தெரியவில்லை.. ஆக மொத்தம் பாஜக ஏதோ குட் நியூஸ் சொல்ல போகிறது என்று மட்டும் யூகிக்க முடிகிறது.. ஆனால் அது என்னவென்றுதான் உறுதியாக தெரியவில்லை..

பதிவு
தன்னுடைய கருத்துக்களை அப்பட்டமாக வெளிப்படுத்தி, அடிக்கடி சர்ச்சைகளை உருவாக்குவதற்கு பெயர் பெற்ற சுப்பிரமணிய சாமி பதிவிட்டுள்ள இந்த ட்வீட்டும் விவாதத்தை ஏற்படுத்தி வருவதுடன், அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.. இப்படித்தான் ஏற்கனவே, "ராமரின் தாய்நாடான இந்தியாவில் பெட்ரோல் விலை 93 ரூபாய், ஆனால் ராவணனின் இலங்கையில் 51 ரூபாய்க்கு பெட்ரோல் கிடைக்கிறது" என்று ட்வீட்டை போட்டு அது நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியது நினைவிருக்கலாம்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications