Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கட்சி அதிகாரத்தை வச்சு வசூல்.. அதுவும் நூதனமா! 'பகீர்' கிளப்பிய பாஜக ஆதரவாளர்! என்ன நடக்குது?!

Subscribe to Oneindia Tamil

சென்னை : பாஜக ஆதரவாளரும், சினிமா தயாரிப்பாளருமான ஜேஎஸ்கே கோபி, தேசியக் கட்சியின் மாநில தலைவரை குறிவைத்து ட்விட்டரில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 'வார் ரூம் பாய்ஸ்' என விமர்சித்து வந்த கோபி, மாநிலத் தலைவரைச் சீண்டும் விதமாக தொடர்ச்சியாக பல ட்வீட்களை வெளியிட்டுள்ளார்.

"கட்சியை வளர்க்கச் சொல்லி அதிகாரம் கொடுத்தா கட்சி அதிகாரத்தை வச்சி வசூல் பண்றாங்க.. அதுவும் நூதனமா..! பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்" என்றும் ஒரு ட்வீட்டை பதிவு செய்திருக்கிறார் ஜேஎஸ்கே கோபி.

கடந்த சில மாதங்களாக தேசியக் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரின் மீது பண வசூல் தொடர்பான குற்றச்சாட்டுகள் கட்சிக்குள்ளேயே எழுந்த நிலையில், பாஜக ஆதரவாளரான ஜேஎஸ்கே கோபியின் பதிவுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

பாஜகவில் கிளம்பிய புகார்

பாஜகவில் கிளம்பிய புகார்

தமிழக பாஜக மாநில தலைவராக அண்னாமலை பொறுப்பேற்ற பிறகு, கட்சியின் புதிய பிரிவு ஒன்றிற்கு தலைவராக நியமிக்கப்பட்ட இளைஞர் மீது பாஜகவிற்குள்ளேயே கடந்த சில மாதங்களாக அதிகமான புகார்கள் எழுந்தன. பாஜக மேலிட தலைவர்களுக்கு நெருக்கமான அவர், முறைகேடுகளில் ஈடுபடுகிறார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. பிரதமர் பெயரில் நடத்தப்படும் ஒரு நிகழ்வுக்காக, தொழிலதிபர்கள், கட்சியினர் என பலரிடம் போலியாக பில் தயார் செய்து வசூல் வேட்டை நடத்துவதாக அவர் மீது பாஜக நிர்வாகிகளே புகார் சுமத்தினர்.

ஓரங்கட்டப்பட்டாரா?

ஓரங்கட்டப்பட்டாரா?

தமிழ்நாட்டில் இயங்கும் முன்னணி தொழில் நிறுவனங்களிடம் மிரட்டி லட்சக்கணக்கில் அவர் பணம் வசூல் செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சில தொழிலதிபர்கள் மேலிடத்தில் தகவல் தெரிவிக்கவே, தலைமை அவரை அழைத்து விசாரித்து, காட்டமாக கண்டித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவரை தற்போது கட்சியில் இருந்து ஓரங்கட்டி இருப்பதாகவும், நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

ஜேஎஸ்கே கோபி

ஜேஎஸ்கே கோபி

ஏற்கனவே தமிழக பாஜகவில் பாலியல் சர்ச்சைகள், ஆடியோ, வீடியோ விவகாரங்கள் தலைவலியைக் கொடுத்து வரும் நிலையில், தற்போது தொழிலதிபர்களிடம் மிரட்டி பணம் வாங்குவதாக எழுந்துள்ள புகார் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், தேசியக் கட்சியின் முன்னணி தலைவர் மீது பாஜக ஆதரவாளரும், சினிமா தயாரிப்பாளருமான ஜேஎஸ்கே கோபி அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தொடர்ச்சியாக இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார் ஜேஎஸ்கே கோபி.

வார் ரூம் பாய்ஸ்

வார் ரூம் பாய்ஸ்

பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய காயத்ரி ரகுராம், அண்னாமலை வார் ரூம் நடத்துவதாகவும், வார் ரூம் உறுப்பினர்கள், கட்சியில் இருப்பவர்களையே விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். அண்ணாமலைக்கு கட்சியில் பிடிக்காதவர்களை டார்கெட் செய்து வார் ரூம் அட்டாக் நடத்துவதாக குற்றம்சாட்டினார். இந்நிலையில், பாஜக ஆதரவாளரும், அகில உலக ஆன்மீக இந்துமத கட்சி தலைவருமான ஜேஎஸ்கே கோபி, தொடர்ச்சியாக, 'வார் ரூம் பாய்ஸ்' என விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.

தலைவர் மாற்றப்படுவார்

தலைவர் மாற்றப்படுவார்

அண்ணாமலை ஆதரவாளர்களின் பதிவுகளைக் குறிப்பிட்டு, வார் ரூம் உருட்டல்கள் என விமர்சித்துள்ள ஜேஎஸ்கே கோபி, "என்னால் கட்சி வளர்கிறது என்று சொல்வது தன்னம்பிக்கை.. என்னால மட்டும்தான் இந்த கட்சிய வளர்க்க முடியும் என்று சொல்வது ஆணவம்." என ட்வீட் செய்துள்ளார். மேலும், "நான் பாஜகவை ஒரு நாளும் விமர்சிக்க மாட்டேன். வார் ரூம் பற்றி மட்டும்தான் நான் விமர்சிப்பேன். எனக்கு அவருடைய செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்ற காரணத்தினால் அவரை தற்போது பொதுவெளியில் குறை கூறுவது நன்றாக இருக்காது. ஒருநாள் அவர் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுவார் அப்போது இதற்கான பதிலை விரிவாக சொல்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார் ஜேஎஸ்கே கோபி.

முட்டு

முட்டு


மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் இரு தரப்பினர் கடுமையான மோதலில் ஈடுபட்டது பற்றி விமர்சித்துள்ள ஜேஎஸ்கே கோபி, "தமிழக பாஜகவில் இது போன்ற ஒரு பிரச்சனையை சந்தித்தது இதுதான் முதல் தடவை. தலைமை சரியாக இருந்தால் இது போன்று நடக்குமா என்று நாம் கேள்வி கேட்டால் உடனே வார் ரூம் பாய்ஸ் வந்து இப்படி நடப்பது எங்கள் கட்சியின் வளர்ச்சி இப்படி நடக்க வைத்தே நாங்கள் தான் என்று முட்டு கொடுப்பார்கள்" என விமர்சித்துள்ளார்.

பல நாள் திருடன்

பல நாள் திருடன்

மேலும், "கட்சிய வளர்க்கச் சொல்லி அதிகாரம் கொடுத்தா கட்சி அதிகாரத்தை வச்சி வசூல் பன்றானுவ..அதுவும் நூதனமா...! பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.." என மறைமுகமாகச் சீண்டி ட்வீட் செய்துள்ளார் ஜேஎஸ்கே கோபி. மற்றொரு ட்விட்டர் பதிவில், "என் வாழ்க்கைல இனி ஒரே ஒரு அண்ணாமலை மட்டும் தான். அது திருவண்ணாமலையார் மட்டும்தான்..." எனக் குறிப்பிட்டு திருவண்ணாமலை கோவில் வீடியோவை பகிர்ந்துள்ளார் ஜேஎஸ்கே கோபி. அவரது பதிவின் கீழ் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அவரை விமர்சித்துப் பதிவிட்டு வருகின்றனர். இதனால், பாஜக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+