Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆட்டமே மாறப்போகுது.. தெலுங்கானாவில் மோடி கொளுத்திய வெடியால் பரபரக்கும் தமிழகம்: தடதட தேர்தல் பிளான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் தேர்தலில், திமுகவுக்கு எதிராகக் களமாட ஒரு முக்கியமான பிரச்சனையை பாஜக கையில் எடுத்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. கோவில் சொத்துகளை தமிழக அரசு முறைகேடாகப் பயன்படுத்துவதாக பிரதமர் மோடி தெலுங்கானாவில் தூவிய நெருப்பு இப்போது பற்றி எரியத் தொடங்கியுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கோவில் வருமானத்தைப் பெருக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவில் வருமானம் மூலம் பல்வேறு சமூக நலத்திட்டங்களை அறிவித்தது திமுக அரசு. தமிழக அரசு கோவில்களை நிர்வகிப்பதை பாஜக தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறது. பல்வேறு கோயில்களின் சொத்துகளிலும், நிர்வாக நடவடிக்கைகளிலும் திமுக அரசு தலையிடுவதாக பாஜக புகார் கூறி வருகிறது.

BJP takes new matter to campaign against dmk government in lok sabha elections

கோவில்கள் - திமுக அரசு: இந்து சமய அறநிலையத்துறை, இந்த 2 ஆண்டு காலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான கோவில்களுக்கு குடமுழுக்க செய்ததாகவும், புனரமைத்துள்ளதாகவும் கூறுகிறது. ஆனால், தொடர்ந்து தமிழக கோயில்களை நிர்வகிக்கும் அறநிலையத் துறை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பாஜக தரப்பில் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. பல கோவில்களில் அரசு தரப்புக்கும், அர்ச்சகர்கள் தரப்புக்கும் பிரச்சனைகளும் ஏற்பட்டு வருகின்றன. பல்வேறு கோவில் நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத்துறை கையில் எடுப்பதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மோடி கொளுத்திப்போட்ட வெடி: இந்தச் சூழலில் தான் தெலுங்கானாவுக்கு சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது, "தமிழக அரசு கோயில் சொத்துகளை அபகரித்துள்ளது. கோயில்களில் கொள்ளையடிக்கப்படுகிறது. கோயில் சொத்துகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இதுபோல் சிறுபான்மையினரின் புனிதத் தலங்களில் செய்வீர்களா? சிறுபான்மையினரின் மத சொத்துகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவீர்களா?" எனக் கேள்வி எழுப்பினார்.

பிரதமரின் குற்றச்சாட்டை மறுத்ததுடன் அவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனமும் தெரிவித்தார். மேலும் ரூ.3,500 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்களை மீட்டுள்ளோம், 1000 கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தி இருக்கிறோம், 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க 112 திருக்கோயில்களை பழமை மாறாமல் சீர்செய்வதற்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதைத் தவறு என்கிறார் பிரதமர்? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

BJP takes new matter to campaign against dmk government in lok sabha elections

கையில் எடுத்த அண்ணாமலை: இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த விஷயத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ளார். கல்லூரிகள் கட்டவும், அரசு அலுவலகங்கள் கட்டவும் கோவில் சொத்துகள் பயன்படுத்தப்படுகின்றன என விமர்சித்துள்ள அண்ணாமலை, மாவட்ட வாரியாக லிஸ்ட் போட்டு, இங்கு இங்கெல்லாம் கோவில்களின் இத்தனை கோடி மதிப்புள்ள சொத்துகள் அரசால் வேறு உபயோகங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன என பட்டியல் போட்டுள்ளார்.

கோவில் உண்டியல் பணத்தை எடுத்துச் செலவழித்த நிதியையே தங்களின் வெற்றியாக விளம்பரம் செய்து வருகிறார்கள். கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு, காணாமல் போன கால்நடைகள், சொத்துக்கள், தங்க நகைகள் இவையே தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் வரலாறு. இவற்றை நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மிகச் சரியாகவே சுட்டிக் காட்டியுள்ளார். கோவில்கள் நமது வழிபாட்டுக்கான இடம், சுரண்டலுக்கான இடம் அல்ல. தமிழக அரசின் பிடியில் இருந்து நமது கோவில்களை விடுவித்து, சுரண்டப்பட்டவை அனைத்தையும் மீட்போம் என சூளுரைத்துள்ளார் அண்ணாமலை.

BJP takes new matter to campaign against dmk government in lok sabha elections

சுத்து போட்டுட்டாங்க: பிரதமரே சொல்லி விட்டார், தமிழக அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு என பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஆவேசமாகத் தெரிவிக்கிறார். பாஜகவின் ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு தலைவரான எம்.நாச்சியப்பன், தொடர்ச்சியாக கோவில் விவகாரங்களை கையில் எடுத்து திமுக அரசைச் சாடி வருகிறார். பாஜக தலைவர்கள் பலரும் சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் இதுதொடர்பாக பேசி வருகின்றனர்.

இன்னொரு பக்கம் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்பவர்கள், வள்ளலார் விழாவை கொண்டாடும் அளவிற்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். தீபாவளி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதவர்கள், இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோவில் நிர்வாகத்தை மட்டும் கையில் வைத்திருப்பது ஏன்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீறிய மாணிக்கவேல்: இன்னொரு புறம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் திமுக அரசுக்கு எதிராகவும், முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராகவும் சீறியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயில்களை தமிழக அரசு ஆக்கிரமித்து வைத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியது நூற்றுக்கு 2 லட்சம் சதவீதம் உண்மை. முதல்வர் ஸ்டாலின் சொல்வது பச்சைப் பொய், இப்போது நான் சிவன் கோவில் முன்பாக நின்று பேசிக்கொண்டிருக்கிறேன். சத்தியம் கூட செய்கிறேன். நான் கூறுவது பொய்யாக இருந்தால் இன்று இரவே நான் செத்துப்போவேன். என ஆக்ரோஷமாக பேசியிருக்கிறார்.

அஜெண்டா இதுதான்: கோவில் சொத்துகளை நிர்வகிப்பதில் முறைகேடு செய்வதாக பாஜக கிளப்பியுள்ள இந்த பிரச்சனை வரும் நாட்களில் இன்னும் பூதாகரமாகக் கிளம்பும் எனத் தெரிகிறது. தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள் மத்தியில் இந்த பிரச்சாரம் எடுபடும் என பாஜக கருதுவதாகத் தெரிகிறது. குறிப்பாக, பெண்கள் மத்தியில் இதை சீரியசான விவாதம் ஆக்கலாம் என பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. வரும் நாட்களில் பாஜகவின் 'ஆலய மீட்பு' பிரச்சாரம் தீவிரமடையக்கூடும்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, ஒவ்வொரு நகர்வையும் பார்த்துப் பார்த்து எடுத்து வைத்து வரும் பாஜக, கோவில்கள் - இந்து சமய அறநிலையத்துறை விவகாரத்தை தற்போது முழு மூச்சாக கையில் எடுத்திருக்கிறது. அண்ணாமலை சபதம் போட, தமிழிசை, பொன்.மாணிக்கவேல் என வரிசையாக இந்த கோதாவில் குதித்திருக்கிறார்கள். ஆக, தமிழ்நாடு பாஜக, திமுக அரசுக்கு எதிராக இந்த ஆயுதத்தை கூர் தீட்டி வருகிறது என்பது மட்டும் தெளிவாகிறது. இது பாஜக எதிர்பார்க்கும் பலனைத் தருமா? திமுக இந்த விமர்சனங்களை உடைத்தெறியுமா? என்பதை போகப்போக பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+