மெகா நாடகம் அரங்கேற்றும் ஸ்டாலின்! அண்ணாமலை அட்டாக்.. பாஜக இன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு எதிராக பொதுமக்களிடையே எழுந்துள்ள கோபத்தையும், எதிர்ப்பையும் மடைமாற்ற, பிற மாநிலங்களில் உள்ள இந்தி கூட்டணிக் கட்சியினரையும் துணை சேர்த்து, இன்று ஒரு மெகா நாடகம் அரங்கேற்றத் திட்டமிட்டிருக்கிறார் ஸ்டாலின் என்று விமர்சித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று காலை 10 மணியளவில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி இன்று பாஜகவினர் தங்கள் வீடுகள் முன்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் மு.க ஸ்டாலின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை இன்று கூட்டினார். சென்னை கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் இந்தக் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோரும் 24 கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.

திமுக நடத்தும் கூட்டம் நாடகம்
தொகுதி மறுவரையைறைக்கு எதிராக திமுக நடத்தும் கூட்டமென்பது ஒரு நாடகம் என்று பாஜக தலைவர்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில், தமிழகம் முழுக்க பாஜக சார்பில் இன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தமிழக பாஜகவினர் தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை ஆகியோர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது:-
திமுக ஆட்சியில், தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. ஊழல் இல்லாத துறைகளே இல்லை எனும் அளவுக்குப் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருக்கிறது. சாமானிய மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் கூட பாதுகாப்பு இல்லாத நிலையில் தமிழகம் தாழ்ந்திருக்கிறது. படுகொலைகள் நடக்காத நாளே இல்லை. பாலியல் குற்றங்கள் நிகழாத நகரமே இல்லை.
காவிரி நீரை கேட்க வாய் வரவில்லை
ஆனால், இவற்றைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தினந்தோறும் விளம்பர ஷூட்டிங் நடத்தி நாடகமாடிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு எதிராக பொதுமக்களிடையே எழுந்துள்ள கோபத்தையும், எதிர்ப்பையும் மடைமாற்ற, பிற மாநிலங்களில் உள்ள இந்தி கூட்டணிக் கட்சியினரையும் துணை சேர்த்து, இன்று ஒரு மெகா நாடகம் அரங்கேற்றத் திட்டமிட்டிருக்கிறார் ஸ்டாலின். தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், ஒரு கற்பனையான பயத்தினை உருவாக்க முயற்சி செய்கிறார்.
கர்நாடக அரசிடம் காவிரி நீரைத் திறந்துவிடச் சொல்ல, முதல்வர் ஸ்டாலினுக்கு வாய் வரவில்லை. மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று கூறிய கர்நாடக மாநிலத் துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு தான் வாழிய பாடி வரவேற்கிறது திமுக. முல்லை பெரியாறு அணையில் ஆண்டாண்டு காலமாகத் தமிழகத்துக்குத் துரோகம் செய்து வருகிறது கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு. தென்காசி மக்களுக்குப் பயன்படும் செண்பகவல்லி அணையிலும் தொடர்ந்து பிரச்சினை மட்டுமே செய்து வருகிறது கேரள மாநிலம்.
கனிம வளங்கள் கொள்ளை
இதுதவிர தமிழகத்தில் கோவை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி என எல்லை மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் அனைத்தும் கேரள மாநிலத்துக்குக் கடத்தப்படுகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 5 முறை கேரளாவிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் சாதித்தது என்ன? அரிசி, பருப்பு, காய்கறிகள் என அனைத்தையும் பெற்றுவிட்டு, பதிலுக்கு கேரள மாநிலம் நமக்கு திருப்பி தருவது மருத்துவ கழிவுகளும், இறைச்சி கழிவுகளும்தான்.
கேரள அரசு இரண்டு நாட்களுக்கு முன்பாக அங்குள்ள தெருநாய்களை கொண்டு வந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கொண்டு வந்து விட்டு சென்றார்கள். இவை அனைத்தும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தெரியாமலா நடக்கிறது. இப்படி தமிழகத்தை ஒரு குப்பை கிடங்காக பார்க்கும் கேரள முதல்வருக்குத் தான் சிவப்புக் கம்பளம் விரிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
தொடர்ந்து தமிழக மக்களுக்கும், தமிழகத்திற்கும் எதிராக செயல்படுவர்களை வைத்து தனது அரசியல் இருப்பை காட்டிக்கொள்ள காட்டிக்கொள்ள துடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. தனது இந்தி கூட்டணிக் கட்சியினருக்காக, தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாகச் செயல்படும் ஸ்டாலினை கண்டித்து, மார்ச் 22-ம் (இன்று) தேதி தமிழக பாஜக சார்பில், கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும்.
காலை 10 மணிக்கு, பாஜகவினர் தங்களது வீட்டு முன்பாக நின்று, தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் கர்நாடக, கேரள மாநிலத் தலைவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் முதல்வர் ஸ்டாலினை கண்டித்து, கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்
-
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்?











Click it and Unblock the Notifications