திராவிட மாடலா? கோபாலபுரம் மாடலா? அந்த “44 குடும்பங்கள்”.. திமுக Vs பாஜக தான்.. சொல்கிறார் அண்ணாமலை!
சென்னை : திராவிட சித்தாந்தம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை எனவும், தமிழகத்தில் திமுகவுக்கு பாஜகதான் உண்மையான மாற்று எனக் கூறியுள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவைக்கு தமிழகத்திலிருந்து அதிகபட்ச எம்பிக்களை அனுப்புவதே தனது இலக்கு என்று கூறியுள்ளார்.
நடந்து முடிந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றதால் தேசிய தலைமை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையை பாராட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கான திட்டங்கள், அக்கட்சி குற்றச்சாட்டாக வைக்கப்படும் தமிழர்களுக்கு எதிரான பிம்பம், ஆளும் திமுக, அதிமுகவுடன் பாஜகவுக்கு உள்ள தொடர்பு குறித்து பிரபல தனியார் தொலைக்காட்சியிடம் பேசினார்.

பாஜக அண்ணாமலை
அதில், " நான் பொறுப்பேற்றதை விட, தொடர்ச்சிதான் முக்கியம். பாஜகவிடம் ஒரு வியூகம் உள்ளது, அதை அடைவதற்காக நாங்கள் செயல்பட்டு வருகிறோம். கட்சியில் நாங்கள் தனிநபர்களை மையபடுத்தவில்லை எனவும், கடந்த பத்து மாதங்களில் திமுகவை ஆக்ரோஷமாக எதிர்கொண்டு அவர்களின் தவறுகளை மக்கள் மன்றத்தில் எடுத்துக் காட்டியுள்ளோம், குடும்ப அரசியல், ஊழல், கார்ப்பரேட் அரசியலுக்கு எதிராக நிற்கும். எதிர்காலத்தில் தமிழகத்தில் திமுகவுக்கு உண்மையான மாற்று

திராவிட சித்தாந்தம் இல்லை
திராவிட சித்தாந்தம் என்று எதுவும் இல்லை. திராவிட முன்னேற்றம் என்றால் என்ன என்று தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறேன். திராவிட மாடல் என்பது அனைவரையும் சேர்ப்பது என்று முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்கிறார். திமுக அனைவரையும் சேர்ப்பதாக இருந்தால், ஒரு குடும்பம் எப்படி கட்சியை நடத்துகிறது? தமிழகத்தில் 44 குடும்பங்கள் திமுகவில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
அதாவது அந்தக் குடும்பத்தின் இரண்டு முதல் மூன்று தலைமுறைகள் தொடர்ந்து பதவியில் இருந்து வருகின்றன. இதைத்தான் திராவிட மாடல் என்று முதல்வர் சொன்னாரா? இது திராவிட மாதிரி இல்லை கோபாலபுரம் மாடல் போல் உள்ளது.

திராவிடம் என்பது என்ன?
திராவிடம் என்பது அனைவரையும் அழைத்துச் செல்வதும், சமூக நீதியும் ஆகும். இது பிராமணர்களை இழிவுபடுத்துவதோ, ஓபிசியை இழிவுபடுத்துவதோ அல்லது இந்துக்களுக்கு எதிரானதோ அல்ல.திராவிடம் என்பது 350 ஆண்டுகளுக்கும் மேலாக சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் அதிகாரம் அளிப்பதாகும். இது நிலத்தை ஆன்மீகமாகவும் தேசியமாகவும் வைத்திருப்பது பற்றியது. பாரத மாதாவைப் பற்றிப் பேசிய பாரதியாரின் பூமி இது. தமிழகம் 1967 வரை அறிஞர்களையும், ஆய்வாளர்களையும், சுதந்திரப் போராட்ட வீரர்களையும் உருவாக்கியுள்ளது. திராவிட நிலத்தை யாரோ கையகப்படுத்தி, அதைத் தங்களுக்குச் சொந்தம் என்று உரிமை கொண்டாட நினைக்கிறார்கள். அதை ஏற்க முடியாது.

பாஜக வெற்றி
நகர்ப்புற அமைப்புத் தேர்தலில், பாஜகவை மாநிலம் முழுவதும் கொண்டு செல்ல பாஜகவுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்தது. இரண்டாவதாக, எங்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட 5,000 அடுத்த தலைமுறை இளம் தலைவர்களை அடையாளம் காண முடிந்தது. மூன்றாவதாக, நாங்கள் இல்லாத இடங்களில் கட்சி வெற்றிபெற முடிந்தது. நான்காவதாக, வாக்குப் பங்கின் அடிப்படையில், நாங்கள் இப்போது மிகப்பெரிய கட்சியாக இருக்கிறோம். ஒட்டுமொத்தமாக, நகர்ப்புற அமைப்புத் தேர்தலின் போது கட்சி தனக்கென நிர்ணயித்த இலக்குகள் அடையப்பட்டது இது ஆரம்பம் தான்












Click it and Unblock the Notifications