ஊருக்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை பாஜக நிர்வாகி முரளீதரன்! நயினார் எடுத்த ஆக்ஷன்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்பே, வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் முரளீதரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக பாஜக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தினை சார்ந்த மாவட்ட துணைத் தலைவர் கட்டுப்பாட்டை மீறியதாலும், R.முரளீதரன் , கட்சியின் கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், அவர் வகித்து வந்த கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார்.

ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
- மாநிலத் தலைவர்
நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் முரளிதரன், கடந்த 30 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் பாஜக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இதுவரை வெளியிடாத நிலையில் தாமாக முன்வந்து வேட்புமனு தாக்கல் செய்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் மீது நயினார் நாகேந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது. பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இதுவரை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வந்திருந்தார்.
அறிவிக்கை:
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) April 3, 2026
தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தினை சார்ந்த மாவட்ட துணைத் தலைவர் கட்டுப்பாட்டை மீறியதாலும், திரு.R.முரளீதரன் அவர்கள், கட்சியின் கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், அவர் வகித்து வந்த கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை… pic.twitter.com/tzUttt58gx
அவர் வேட்பாளர்கள் பட்டியலை அறிவிப்பார் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய சனிக்கிழமை, திங்கள்கிழமை ஆகிய இரு தினங்களே இருப்பதால் இன்றைய தினம் எப்படி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பாஜக பெற்ற தொகுதிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
மயிலாப்பூர்
தளி
மொடக்குறிச்சி
உதகை
அவிநாசி
திருப்பூர் தெற்கு
கோவை வடக்கு
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை
திருப்பத்தூர்
மதுரை தெற்கு
சாத்தூர்
திருச்செந்தூர்
வாசுதேவநல்லூர்
ராதாபுரம்
நாகர்கோவில்
விளவங்கோடு
ஆவடி
திருவண்ணாமலை
தஞ்சாவூர்
திருவாரூர்
அறந்தாங்கி
ராசிபுரம்
ராமநாதபுரம்
பத்மநாபபுரம்
மானாமதுரை
குளச்சல்
ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டி என சொல்லிவிட்டார். ஏனைய 26 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications