எடப்பாடிக்காக அமித் ஷா உருவாக்கும் டீம்.. குழுவின் தலை யார் தெரியுமா? கேட்டா ஆடிப்போயிடுவீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவில் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை செய்வதற்காக.. பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக ஒரு குழு உருவாக்கப்பட உள்ளதாம். பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக இந்த குழு உருவாக்கப்பட இருக்கிறதாம்.

நேற்று பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடத்தினார். சுமார் ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிமுக அலுவலகத்தை பார்வையிட டெல்லி வந்ததாக கூறிய எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேல் ஆலோசனை நடத்தினார். முதலில் அதிமுக நிர்வாகிகளை கூட்டாக சந்தித்த அமித்ஷா, பிறகு எடப்பாடி பழனிசாமி உடன் தனியாகவும் பேசியுள்ளார்.

இந்த ஆலோசனையில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த விஷயங்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.

1. எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர். அதாவது எடப்பாடி பழனிச்சாமி பதவிக்கு சிக்கல் இல்லை. அவர் முதல்வர் வேட்பாளர் + அதிமுக பொதுச்செயலாளர். இரண்டும் இருக்கும்.

2. ஆனால் அவர் அண்ணாமலை பதவியை மாற்ற வேண்டும் என்று அமித் ஷாவிடம் கோரிக்கை வைக்க முடியாது. அண்ணாமலை பதவியை தொடருவார் என்று இதற்காக சொல்ல முடியாது. அண்ணாமலை தொடர்பாக என்ன முடிவாக இருந்தாலும் பாஜகவே எடுக்கும். அதில் எடப்பாடி பழனிசாமி தலையிட முடியாது.

BJP to form a team to talk with AIADMK Edappadi Palanisamy on BJP alliance dealings

3. டிடிவி தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை அதிமுகவில் சேர்ப்பது பற்றி கேட்கப்படாது. இதற்கான அழுத்தம் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்படாது.

4.அதோடு பாஜக டிடிவி தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை கூட்டணியில் சேர்த்தால் கூட அதை எடப்பாடி பழனிச்சாமி கேட்க கூடாது என்று செக் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

5. இதெல்லாம் போக எடப்பாடியுடன் பேச பாஜகவில் குழு உருவாக்கப்பட உள்ளது. அதாவது அந்த குழுதான் பாஜக - அதிமுக இடையிலான ஆலோசனைகளை மேற்கொள்ளும். முடிவுகளை எடுக்கும்.

6. அந்த குழுதான் கூட்டணி இடங்கள் பற்றிய இறுதி முடிவுகளை கூட எடுக்கும். ஆனால் இந்த குழு பாஜக தலைவர் எடுக்கும் முடிவுகளில் தலையிடாது. இது முழுக்க முழுக்க கூட்டணி பற்றி ஆலோசனை செய்ய மட்டுமே அமைக்கப்படும் குழு.

7. அந்த குழுவிற்கு வானதி சீனிவாசன் அல்லது நயினார் நாகேந்திரன் தலைமை வகிப்பார்கள். இவர்கள் மட்டுமே அதிமுக உடன் டீலிங்கை மேற்கொள்வார்கள். வேறு யாரும் மேற்கொள்ள மாட்டார்கள்.

8. இதையடுத்தே நேற்று கூட்டணியை முடிவு செய்துள்ளனர். ஆனால் இதை சென்னையில்தான் அறிவிப்பார்கள். அண்ணாமலையோடு இதற்காக சம்பிரதாய மீட்டிங் ஒன்றும் நடத்தப்பட உள்ளது.

9. அதாவது சென்னையில் அண்ணாமலையை வைத்துக்கொண்டு அறிவிக்க வேண்டிய சூழல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இப்போதைக்கு கூட்டணி பற்றிய அறிவிப்பு இருக்காது.. விரைவில் இருக்கும் என்று தகவல்கள் வருகின்றன.

Take a Poll

10. இறுதியாக நம்முடைய இலக்கு.. சபதம் ஒன்றாகவே இருக்க வேண்டும். நமது கூட்டணியின் நோக்கம் ஒன்றாகவே இருக்க வேண்டும். அது 2026ல் திமுகவை வீழ்த்துவது. அதுதான் நமது நோக்கம் மற்றும் கூட்டணியின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்ற முடிவும் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+