2 பேரையும் உடனே தமிழ்நாடு அனுப்புங்க! மேப்பில் புள்ளி வைக்கப்பட்ட 6 இடங்கள்! பாஜகவின் பிரம்மாஸ்திரம்

பாஜகவின் இந்த செயலுக்கு பின் பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக சார்பாக லோக்சபா தேர்தலுக்காக திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் பாஜக பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறதாம்.

கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜக மூத்த தலைவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வந்தார். அதன்பின் தேசிய தலைவர் ஜே பி நாட்டாவும் தமிழ்நாடு வந்து இருந்தார்.

இந்த பயணத்தின் போது தமிழ்நாடு பாஜக தலைவர்களுக்கு முக்கியமான சில அறிவுரைகளை வழங்கி உள்ளனர். முக்கியமாக லோக்சபா தேர்தல் குறித்து முக்கியமான சில அறிவுரைகளை வழங்கி உள்ளனர்.

அறிவுரை

அறிவுரை

அதில், தமிழ்நாட்டில் பாஜக தலைவர்களை அதிகம் பேசுகிறார்கள். ஆனால் அவர்களின் செயல்பாடு குறைவாக உள்ளது. கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் உள்ளது. முக்கியமாக பூத் கமிட்டியை வலுப்படுத்தவில்லை என்ற கோபத்துடன் அமித் ஷாவி பேசியதாக கூறப்பட்டது. தமிழ்நாட்டில் பூத் வாரியாக பாஜகவை வலுப்படுத்த வேண்டும் . பூத் வாரியாக பாஜகவிற்கு ஆள் பிடிக்க வேண்டும். தமிழ்நாடு பாஜக இதில் இன்னும் பின்னடைவை சந்தித்தே வருகிறது. அதை சரி செய்யுங்கள் என்று அமித் ஷா கூறியுள்ளார்.

நட்டா

நட்டா

அதன்பின் தமிழ்நாடு வந்த நட்டா, அதிமுகவுடன் கூட்டணி வைப்பது பற்றி எல்லாம் நாங்கள் முடிவு எடுத்துக்கொள்வோம். நீங்கள் கவலைப்பட வேண்டாம், கூட்டணி பற்றி யோசிக்காதீர்கள். ஆனால் பூத் கமிட்டி மீது கவனம் செலுத்துங்கள். பூத் கமிட்டிதான் இப்போது முக்கியம். பாஜக தனியாக நின்றாலும் வெற்றிபெறும் அளவிற்கு பூத் கமிட்டியை வலுப்படுத்துங்கள் என்று நட்டா பேசிவிட்டு சென்று இருக்கிறார். இதையடுத்தே தற்போது மாவட்ட வாரியாக பூத்களை அமைக்கும் பணிகளை பாஜக முடுக்கி விட்டு உள்ளது. இதற்காக பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு மாவட்டங்களில் பூத்களுக்கு சென்று பார்வையிட இருக்கிறார்.

பூத்

பூத்

அதிமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்கும் திட்டத்திலும் அக்கட்சி உள்ளது.பூத் அளவில் பாஜகவிற்கு 10- 15 ஆட்கள் இருந்தால்தான் பாஜகவிற்கு தேர்தல் நேரத்தில் வசதியாக இருக்கும். இதை கருத்தில் கொண்டே பாஜக தற்போது பூத் கூட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளதாம். இந்த நிலையில்தான் மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங் ஆகியோர் இந்த மாதம் தமிழ்நாடு வர உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் இருந்து இவர்கள் தமிழ்நாட்டிற்கு பூத் கமிட்டியை அமைப்பதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

2 பேர்

2 பேர்


தமிழ்நாட்டில் பாஜக மொத்தம் 6 தொகுதியில் வெற்றிபெற திட்டமிட்டுள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் 6 இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்று அந்த கட்சி காய் நகர்த்தி வருகிறது. இந்த 6 இடங்கள் ஏற்கனவே குறிக்கப்பட்டுவிட்டது. சிவகங்கை, ராமநாதபுரம், தென்சென்னை, நீலகிரி ஈரோடு, கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய 6 இடங்களை பாஜக குறித்து உள்ளதாம். இந்த தொகுதிகளில் இவர்கள் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசனைகளை செய்ய இருக்கிறார்கள். மற்ற இடங்களில் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை. இந்த 6 இடங்களில் வென்றே ஆக வேண்டும் என்று திட்டத்தில் பாஜக இருப்பதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+