பயங்கர பிளான்! யோகி ஆதித்யநாத், அமித் ஷா... திருப்பரங்குன்றத்திற்கு போகும் பாஜகவின் வடஇந்திய தலைகள்?
சென்னை: 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக பாஜக தேசிய தலைவர்கள் பலர் தமிழ்நாட்டிற்கு வர உள்ளனர். திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தை பெரிதாக்கும் விதமாக, பூதாகரமாக்கும் விதமாக பாஜக தலைவர்கள் பலர் தமிழ்நாடு வர உள்ளனர்.
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் கோயிலின் விவகாரத்தை ஒரு முக்கிய அரசியல் பேசுபொருளாக மாற்ற பாரதிய ஜனதா கட்சியின் டெல்லி தலைமை திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தங்கள் அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்தவும், ஆதரவைத் திரட்டவும் கட்சி விரும்புகிறது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டிற்கு வரும் பாஜக தலைகள்
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வரும் மாதங்களில் பல மூத்த தேசியத் தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தரவுள்ளனர். உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக மூத்த தலைவர் பி.எல். சந்தோஷ், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, மற்றும் அனுராக் சிங் தாக்கூர் ஆகியோர் இந்த லிஸ்டில் அடங்குவர். இந்தத் தலைவர்கள் அடுத்தடுத்து வந்து தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
மேலும், பாஜக தலைவர்கள் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு ஒரு மத யாத்திரையாகச் செல்லவும் திட்டமிட்டுள்ளனர். அதாவது ஒன்றாக சென்று கோவிலில் வழிபாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய வருகைகள் பக்தர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி பாஜகவை வளர்க்க வழி செய்யும். மக்களிடம்.. மத மற்றும் கலாச்சாரப் பிரச்சினைகள் குறித்த தங்கள் நிலைப்பாட்டை எடுத்துக்காட்ட உதவும் என்று பாஜக கட்சித் தலைவர்கள் நம்புகின்றனர்.
அமித் ஷாவும் வருகிறார்
தமிழ்நாட்டை குறிவைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தன் தமிழக வியூகம் தொடர்பாக, வாரத்திற்கு ஒருமுறை சென்னைக்கு வந்து தங்குவார் என பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக சென்னையில் ஒரு பெரிய குடியிருப்பு ஒன்றை தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
அமித் ஷா தங்குவதற்கு வசதியாக அவர் இந்த குடியிருப்பை தேர்வு செய்வார் என்கிறார்கள். கிண்டி, அடையார் சுற்றுவட்டாரத்தில் அவருக்கான தற்காலிக குடியிருப்பு தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. மயிலாப்பூர், நங்கநல்லூர் பகுதிகளிலும் குடியிருப்புகளை தேர்வு செய்யும் தேடுதல் வேட்டை சில பாஜக தலைகள் வழியாக தேர்வு செய்யப்பட்டு வருகிறதாம்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டிசம்பர் 15 அன்று தமிழகம் வரவுள்ளார். அவர் சென்னை - வேலூர் செல்லும் வழியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். வரவிருக்கும் தேர்தல்களை கருத்தில் கொண்டு, கூட்டணி விரிவாக்கம் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பரங்குன்றம் வழக்கு
ஏற்கனவே திருப்பரங்குன்றம் வழக்கில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. திங்கள் கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டதை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை கடந்த வெள்ளி அன்று இருநீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு வந்தது. அனைத்து மேல்முறையீடுகளும் நீதிபதிகள் ஜி ஜெயச்சந்திரன் மற்றும் நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் பட்டியலிடப்பட்டுள்ளன.
அப்போது தமிழக அரசு சார்பில் கோவில் அருகே தர்கா உள்ளது. இதனால் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற கோவில் நிர்வாகம் தான் அனுமதி வழங்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது தீபத்தூண் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று தமிழக அரசு வாதம் வைத்துள்ளது. இதில் திங்கள் கிழமை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
-
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications