'எனக்கு இந்தி தெரியாது' ஒரே பாஜக உறுப்பினர் உமாஆனந்தன்! ‘மே இந்தி மாலும்' ஒரு மணி நேரத்தில் பல்டி
சென்னை : சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பாஜக உறுப்பினர் உமா ஆனந்த் பேசினார்.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2022-23ம் நிதியாண்டுக்க பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பாஜக உறுப்பினர் உமா ஆனந்த் பேசினார்.
மாமன்ற அவையில் நமஸ்காரம் என்று கூறி தனது உரையை உமா ஆனந்த் தொடங்கினார். அப்போது 'வணக்கம்' என்று திமுக உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் சத்தமாக கூறினர்.

இந்தி தெரியாது
பின்னர், ஆங்கிலம் , தமிழ் இரு மொழிகள் கலந்து நான் பேசுவேன் மன்னித்து விடுங்கள் என பாஜக உறுப்பினர் உமா கூறிய நிலையில் , இந்தியில் மட்டும் பேசிவிட வேண்டாம் என்று நகைச்சுவையாக திமுக உறுப்பினர்கள் கூறினர். அதற்கு ' எனக்கும் இந்தி தெரியாது ' என்று உமா பதிலளித்தார். இதனால் திமுக உறுப்பினர்கள் கைதட்டி சிரிப்போடு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

உறுப்பினர்கள் வரவேற்பு
தொடர்ந்து பேசிய அவர், கவுன்சிலர்களுக்கும் சம்பளம் அவசியம், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரினார் . அப்போது குறுக்கிட்ட துணை மேயர் மகேஷ்குமார், ஒன்றிய அரசு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டால் உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளிக்க, திமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.

இந்தி சர்ச்சை
ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்து இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மொழி போராட்டத்திற்கு பெயர் போன தமிழகத்தில் வழக்கம் போலவே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக, அதிமுக, மதிமுக என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்தி தெரியும்
இந்நிலையில் இந்தியை ஆதரித்து பல சமயங்களில் பேசிய உமா ஆனந்தன், இந்தி தெரியாது என கூறியது குறித்து கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். எனக்கு இந்தி தெரியும் 'மேரா இந்தி மாலும்' . வேண்டுமென்று தான் இந்தி தெரியாது எனக்கூறினேன்" என பேசினார். கூட்டத்திற்குள் ஒரு பேச்சு, வெளியே ஒரு பேச்சா என அங்கிருந்தவர்கள் கமெண்ட் அடித்ததாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications