ஜேஎன்யூ ரிசல்ட் ட்ரெயிலர்தான்.. லோக்சபா தேர்தலிலும் இதுதான் நடக்கும்.. அடித்து சொல்லும் மனோ தங்கராஜ்
சென்னை: கருத்துக்கணிப்பில் வேண்டும் என்றால் 400 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று கூறப்படலாம் ஆனால் உண்மையில் பாஜக படு தோல்வியையே சந்திக்கும். குறிப்பாக தமிழகத்தில் நோட்டாவுக்கு கீழே தான் வாக்குகள் பெறும் என்று டெல்லி ஜேஎன்யூ தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததை சுட்டிக்காட்டி அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
நாட்டின் பிரபலமான கல்வி நிறுவனங்களில் ஒன்று டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். ஜேஎன்யூ எனப்படும் இந்த பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தேர்தல் நடந்தது. அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் சங்க தேர்தலில் இடதுசாரி அமைப்புக்கும் வலதுசாரிக்கு போட்டி நிலவியது.

இந்த தேர்தலில் வலது சாரி அணியே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இடதுசாரி கூட்டமைப்பு தலைவர் தேர்தலில் தனஞ்செய் வெற்றி பெற்றார். 922 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் வேட்பாளர் உமேஷ் சந்திரா தோல்வியடைந்தார்.
இந்த நிலையில், டெல்லி ஜேஎன்யூ தேர்தலை முன் உதாரணம் காட்டி பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பாஜகவும் இதேபோலத்தான் கருத்துக்கணிப்பில் வேண்டும் என்றால் 400 தொகுதிகளில் ஜெயிப்பதாக கூறப்படலாம் ஆனால் உண்மையில் பாஜக தோல்வியையே சந்திக்கும். குறிப்பாக தமிழகத்தில் நோட்டாவுக்கு கீழே தான் வாக்குகள் பெறும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக மனோ தங்கராஜ் கூறியிருப்பதாவது:- டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரி மாணவர் அமைப்புகளை சேர்ந்த இளைஞர்களுக்கு எனது வாழ்த்துக்கள். தேர்தலுக்கு முன்பு அத்தனை வட இந்திய ஊடகங்களும் சங்க பரிவாரின் மாணவர் அமைப்பான ABVP பெரும் வெற்றியை ஈட்டும் என திட்டவட்டமாக கூறினர்.
வாக்கு எண்ணிக்கையின் போதும் அப்படியே ஒரு பிம்பத்தை உருவாக்கினர். கடைசியில் ABVP இருந்த இடமே தெரியாமல் சென்றுள்ளது. இதுதான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான டிரெய்லர். ஊடகங்கள் "பாஜக 400 இடங்களில் வெற்றி பெறும், தமிழ்நாட்டில் 25% வாக்குகளை பெறும்" என நிர்பந்தத்தால் மிகை படுத்தி பேசுகின்றன. ஆனால் தேர்தலில் பாஜக படுதோல்வி அடையத்தான் போகிறது. அதுவும் குறிப்பாக தமிழ் நாட்டில் NOTA வுக்கு கிடைக்கும் வாக்குதான் BJP க்கு கிடைக்க போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லி ஜேஎன்யூ மாணவர் சங்கத் தேர்தலில் சுமார் 7,000-க்கும் அதிகமானோர் வாக்களித்ததில், 955 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் வேட்பாளர் உமேஷ் சந்திரா அஜ்மீராவை இடதுசாரி மாணவர் கூட்டமைப்பின் தனஞ்செய் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் இடதுசாரியான அவ்ஜித் கோஷ், பாஜகவின் ஏபிவிபியின் தீபிகா சர்மாவை 927 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்தார்.
இதேபோல பொதுச் செயலாளர் பதவி, இணைச் செயலாளர் பதவிகளுக்கான தேர்தலிலும் பாஜகவின் ஏபிவிபி வேட்பாளர்களை இடதுசாரி மாணவர்கள் கூட்டமைப்பினர் வீழ்த்தினர். இத்தேர்தல் மூலமாக மொத்தம் 42 கவுன்சிலர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது டெல்லி ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவராக வெற்றி பெற்றுள்ள தனஞ்ஜெய், பீகார் மாநிலம் கயாவை சேர்ந்தவர் ஆவார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications