ஜஸ்ட் 10 வினாடிதான்.. பயங்கர சத்தமாக வெடித்த பலூன்கள்.. பரவிய தீ.. சென்னை பாஜக நிகழ்ச்சியில் பகீர்
சென்னை: சென்னை அம்பத்தூரில், பாஜக நடத்திய நிகழ்ச்சியில் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. 10 வினாடிகள்தான் எல்லாம் ஓவர்.. சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
Recommended Video
இத்தனைக்கும் வெடித்தது பலூன்தான். ஆனால் அதற்குள் ஹைட்ரஜன் நிரப்பப்பட்டு இருந்ததுதான் இந்த விபரீதத்திற்கு காரணமாம்.
பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்த நாளை கொண்டாடிய பாஜகவினருக்கு ஏதாவது ஒரு இடையூறு நடந்து விட்டது போலும்.

முருகன் மீது வழக்குப் பதிவு
தி.நகரிலுள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்திற்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் வருகை தந்த பாஜக தலைவர் முருகன் மீது போலீஸ் வழக்கு பாய்ந்துள்ளது. அனுமதியின்றி இவ்வாறு அவர் ஊர்வலம் சென்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் என்றால் பலூன் வெடிப்பும் மோடி பிறந்த நாளையொட்டிதான் அரங்கேறியது.

பிறந்த நாள் நிகழ்ச்சி
அம்பத்தூர், பாடி, சிவன் கோயில் அருகே, பாஜக விவசாய பிரிவு துணைத் தலைவர் முத்துராமன், நேற்றுமுன்தினம், மோடி பிறந்த நாள் விழாவில் பங்கேற்றார். அங்கு திரளாக பாஜக தொண்டர்கள் குழுமியிருந்தனர். ஆர்வ மிகுதியில், சிலர் பட்டாசு வெடித்தனர்.

வெடித்த பலூன்கள்
இந்த பட்டாசு தீப்பொறி, முத்துராமன் உள்ளிட்டோர் நின்ற பகுதிக்கு மேலே தாழ்வாக பறந்த, 500க்கும் மேற்பட்ட பலூன்கள் மீது பட்டது. அவ்வளவுதான், அவை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. பயந்துபோய் பலரும் ஓட்டம் பிடித்தனர். சிலரது சட்டைகளில் தீ பிடித்தது. இதில் 30க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.

பாய்ந்த வழக்கு
இந்த வீடியோ தற்போது வைரலாக சுற்றி வருகிறது. 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்போது பெருமளவுக்கு தொண்டர்கள் கூடியது, தீப்பற்றக்கூடிய பொருட்களை அஜாக்கிரதையாக கையாண்டது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ், முத்துராமன் உள்ளிட்டோர் மீது காவல்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹைட்ரஜன் வாயு
பலூன்களை நிரப்ப, ஹீலியம் வாயு வழக்கமாகப் பயன்படுத்தப்படும். ஆனால், இது ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட பலூன் என்று கூறப்படுகிறது. ஹீலியம் வாயுவைவிட ஹைட்ரஜன் வாயு விலை குறைவு. எனவே, இதை பயன்படுத்தி பலூன்களை நிரப்பியுள்ளனர் எனத் தெரிகிறது. பலூனுக்குள் இருந்தது என்ன வாயு என்பது பற்றியும், விசாரணை நடைபெற்று வருகிறது.
-
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
தாறுமாறாக சரிந்த தங்கம்.. தொடர்ந்து இன்னும் சரியுமா? விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ்












Click it and Unblock the Notifications