சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கப்சிப் திமுக.. "முதல்வர் எம்.கே.எஸ்".. ஏன் இவ்வளவு சைலண்ட்.. மொத்தம் 9 கேள்விகள் கேட்ட காயத்ரி

காயத்ரி ரகுராம் திமுகவை சரமாரியாக விமர்சித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "தமிழ் மக்களுக்காக திமுக செய்தது என்ன? எல்லாப் பணமும் குடும்பப் பிறந்தநாள் மற்றும் விளம்பரத்திற்காக திமுக கூட்டங்களுக்குச் செலவிடப்படுகிறது. மக்கள் பார்க்கிறார்கள்.. திமுக ஏன் அமைதியாக இருக்கிறது" என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளார் பாஜகவின் காயத்ரி ரகுராம். இது திமுகவினரை கொந்தளிக்க வைத்து வருகிறது.
பாஜக பிரமுகரான காயத்ரி ரகுராமுக்கு, கட்சியில் இணைந்து ஓரிரு வருடத்திற்கெல்லாம் தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது..

அதுவரை விசிகவையும், திருமாவளவனையும் மட்டுமே சீண்டி கருத்து தெரிவித்து வந்தார் காயத்ரி.. இவரது கருத்தினையும், ட்விட்டினையும் விசிக தலைமை எப்போதுமே கண்டுகொள்வதில்லை.. ஆனால், சிறுத்தைகள் மட்டும் அவ்வப்போது திரண்டு வந்து காயத்ரி ரகுராம் ட்விட்டர் கருத்துக்கு பதிலடி தருவார்கள்.

நாமெல்லாம் விதைகள்.. தாமரை மலரும்.. காயத்ரி ட்வீட்.. நாமெல்லாம் விதைகள்.. தாமரை மலரும்.. காயத்ரி ட்வீட்..

 காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

இதற்கு பிறகு திமுக ஆட்சி பொறுப்பை ஏற்கவும், அப்படியே யூடர்ன் அடித்து அறிவாலயம் பக்கம் திரும்பி உள்ளார் காயத்ரி ரகுராம்.. திமுகவின் ஒவ்வொரு நிகழ்வையும் விமர்சித்து வருகிறார்.. திமுகவுக்கு சம்பந்தமே இல்லாத விஷயம் என்றாலும்கூட, திமுகவுடன் அவற்றை தொடர்புபடுத்தி ட்வீட் போட்டு விடுவார்.. இப்படித்தான் 4 நாளைக்கு முன்புகூட ஒரு ட்வீட் போட்டிருந்தார்.

சூர்யா

சூர்யா

சூர்யாவுக்கு, டைரக்டர் ரஞ்சித் ஆதரவு தந்திருந்த நிலையில், உடனே ரஞ்சித் மீது பாய்ந்தார் காயத்ரி.. அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்வீட்டும் பதிவிட்டார்.. அதில், "சினிமாவை முழுமையாக திமுக கைப்பற்றியது. திமுக குடும்பத்தின் அடிமைகளாக சினிமா மாறிவிட்டது.. சாதி, மதம் இல்லாத ஒரே தொழில் சினிமா மட்டுமே. இப்போது அது தவறான கைகளுக்கு சென்றுவிட்டது' என்று கூறியிருந்தார்.. இதற்கு திமுகவினரும் உடனடியாக திரண்டு வந்து எதிர்வினையாற்றினர்.. "மேடம், இதுல திமுக எங்க வந்தது?" என்று கேள்வி எழுப்பினர்.

 உதயநிதி

உதயநிதி

இதற்கு பிறகும் காயத்ரி விடவில்லை.. "திமுக தொண்டர்கள் ரசிகர் பட்டாளத்தை உதயநிதியில் இருந்து சூர்யாவுக்கு மாற்றிவிட்டார்களா? அடுத்த திமுக முதல்வர் வேட்பாளர் நடிகர் சூர்யா? நான் குழப்பத்தில் இருக்கிறேன்" என்று ட்வீட் போட்டார்.. அதற்கு பிறகும் காயத்ரி விடவில்லை.. "திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதை தடை செய்கிறீர்கள்... ஆனால் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு மற்றும் கோவையில் திமுக கூட்டம் 1 லட்சம் பேர்... திமுக, இந்து கோவில்களை கோவிட் மையமாக காட்டுகிறார்களா? இது சரியா? கடவுள் அவர்களின் அட்டூழியங்களையும் அநீதிகளையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆளுங்கட்சியால் மக்கள் சோர்ந்து போயுள்ளனர்" என்று பதிவிட்டிருந்தார்.

 திமுக என்ன செய்தது

திமுக என்ன செய்தது

இப்போதும் காயத்ரி விடவில்லை.. காலையில் இருந்து டக்கு டக்கென ஏராளமான ட்வீட்களை திமுகவுக்கு எதிராக அள்ளி தெளித்துள்ளார்.. அந்த ட்வீட்கள் தான் இவை: "தமிழ் மக்களுக்காக திமுக செய்தது என்ன? எல்லாப் பணமும் குடும்பப் பிறந்தநாள் மற்றும் விளம்பரத்திற்காக திமுக கூட்டங்களுக்குச் செலவிடப்படுகிறது. மக்கள் பார்க்கிறார்கள்.. டாஸ்மாக் கண்டித்து திமுக தடையை போராட்டம் நடத்தியது. இன்று வரை எந்த முன்னேற்றமும் இல்லை. இன்று அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.

 நீட் தேர்வு

நீட் தேர்வு

நீட் தேர்வின் காரணமாக இன்று பழங்குடி சமூகக் குழந்தைகளும் மற்ற குழந்தைகளும் கூட டாக்டர் ஆக சம உரிமை பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளுக்கு கல்வி வளர்ச்சி தேவை குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமானது. இன்று திமுக அமைதியாக இருக்கிறார்கள்" என்று 3 அடுத்தடுத்த ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.

 9 பாயிண்ட்கள்

9 பாயிண்ட்கள்

இதைதவிர, 9 பாயிண்ட்களை லிஸ்ட் போட்டு சொல்லி மற்றொரு ட்வீட் போட்டுள்ளார்.. அதில், 1. பள்ளி மாணவர்கள்/பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு - புகாரை காவல்துறை புறக்கணிக்கிறது. 2. பெட்ரோல் டீசல் விலையை முதல்வர் எம்.கே.எஸ் குறைக்கவில்லை 3.போலீஸ் பயங்கரவாதிகளால் கொல்லப்படுகிறார். 4. 1 மணி நேரம் கனமழை - இடுப்பு மட்ட வெள்ளம். 5. காய்கறிகள் விலை உயர்வு. 6. அம்மா கேண்டீனில் கலைஞர் படம். 7. ரவுடிகள் கடையை அடித்து நொறுக்குகிறார்கள் 8. மின்சாரம் தாக்கியதால் குழந்தைகள்/மாடுகள் இறந்தன- இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. 9. அறிக்கை/ whitepaper - காகிதப் படகுகளாகப் போய்விட்டன" என்று பதிவிட்டுள்ளார்.

பரபரப்பு

பரபரப்பு

காயத்ரியின் இந்த ட்வீட்டுக்கு பலரும் திரண்டு வந்து பதிலடி தந்து கொண்டிருக்கின்றனர்.. "மேடம்... மொதல்ல தூக்கத்தில் இருந்து எழுந்துருங்க" என்றும், "நாங்க பார்த்து கொண்டு தான் இருக்கிறோம் மேடம், பாஜக அண்ணாமலையின் செயல்பாடுகளையும் மக்கள் இன்னல் படும் நேரத்தில் போட்டோ ஷூட் ஷூட்டிங் எடுக்கும் பாஜகவினரையும்" என்று சுடச்சுட காயத்ரிக்கு பதில் தந்து வருகிறார்கள்.

English summary
BJPs Gayathri raghuram tweeted about DMK and raised questions
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X