அதிமுக எங்களுடன் சேர்வதால் அழியும் என்பதை நம்பாதீங்க! திமுக பலவீனமாக இருக்கிறது-நயினார் நாகேந்திரன்
சென்னை: "திமுக கூட்டணியில் சலசலப்பு இருந்து வருகிறது. பலமாக இருப்பதாக மாயை! நாங்கள் யாரையும் மிரட்டி கூட்டணியில் சேர்க்கவில்லை. பாஜவுடன் கூட்டணி வைப்பதால் அதிமுக அழியும் என மற்ற கட்சிகள் கவலைப்பட வேண்டாம்" என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார்.
இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "யாரையும் மிரட்டி பண்ணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அதிமுகவை மிரட்டியதாக சொல்பவர்கள், ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியல. யாரை கண்டு அவர்கள் பயந்து போய் இருக்கிறார்கள்? என தெரியல. மிரட்டுவதற்காக நாங்க யாரும் இல்லை" என்று கூறியிருக்கிறார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக காணாமல் போய்விடும் என்று கூறுகிறார்களே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அதாவது அதிமுகவை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் அவங்களுக்கு என்ன வந்திருக்கு? அவங்க அவங்க கட்சியை, அவங்க அவங்கள தான பாக்கணும். நீங்க ஏன் அடுத்த வீட்ட பத்தி கவலைப்படுறீங்க? உங்க வீட்ல நடக்கக்கூடிய பிரச்சனைய பாருங்க. இன்னைக்கு காங்கிரஸ் கட்சி ஆட்சியில பங்கு கேட்கறது மாதிரி சொல்றாங்க. திமுக கூட்டணி நெருக்கடியியல் இருக்கு. விடுதலை சிறுத்தைகள் தொடருமான்னு தெரியல. நீங்க ஏன் அண்ணா திமுகா பத்தி கவலைப்படுறீங்க. தமிழகத்துல பாரதிய ஜனதா ஆட்சிக்கு கொண்டு வரதுக்கு வாய்ப்பு உண்டு.
தமிழகத்தில் நாங்கள் இப்பொழுது அண்ணா திமுக கூட கூட்டணி வச்சிருக்கிறோம். எங்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். வர வாய்ப்பு இருக்கிறது. அதிமுகவின் கொள்கைகள், எங்களுடைய சிறிய திட்டம். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஜெயிக்கணும் திமுக ஆட்சி அகற்றப்படணும் இதுதான் எங்களுடைய கருத்து" என்று பதிலளித்திருக்கிறார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications