மணிப்பூரில் தமிழர்களும் ஊடுருவி கலவரத்தை தூண்டினர்.. பாஜக போன விஜயதரணி பகீர் குற்றச்சாட்டு
சென்னை: பாஜகவில் தேர்தல் முடிந்ததும் தனது அடுத்த கட்ட அரசியல் பயணத்திற்கான அறிவிப்பு வரும் என கூறி இருக்கிறார் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த விஜயதரணி. மேலும் பிரதமர் மோடி குறித்தும் மணிப்பூர் கலவரம் குறித்தும் அவர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயதரணி கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட விருப்பப்பட்டார்.

ஆனால் காங்கிரஸ் தலைமை அதற்கு உடன்படவில்லை இதையடுத்து அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். அவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
விஜயதரணி: ஆனால் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு கூட அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அவர் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் பாஜகவில் தனது நிலை என்ன என்பது குறித்து பேசி இருக்கிறார். இது தொடர்பாக புதிய தலைமுறை ஊடகத்திடம் பேசிய அவர்,"மக்களவைக்கான நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் பட்டியலில் எனது பெயர் இல்லை. விளவங்கோடு சட்டசபைக்கான வேட்பாளர் பட்டியலிலும் என் பெயர் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடலாம் என நான் இருந்தேன்.
வாய்ப்பு இல்லை: ஆனால் சட்டசபை தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை. ஏற்கனவே மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்ததால் அடுத்த தலைமுறைக்கு குறிப்பாக பெண்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்ற நோக்கத்திலேயே நான் போட்டியிடவில்லை. தற்போதும் பெண்களுக்கே தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் எனக்கு மகிழ்ச்சிதான். விளவங்கோடு தொகுதியில் பாஜக நிச்சயமாக வெற்றி பெறும். பிரதமர் மோடி மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதை பலர் அது எண்ணமாக இருக்கிறது. அதற்காகத்தான் தேவையில்லாமல் விவகாரங்களை கிளப்பி வருகின்றனர். குறிப்பாக மணிப்பூரில் கலவரம் நடந்தது குறித்து பிரதமர் தெளிவாக இருக்கிறது.
திட்டமிட்டு கலவரம்: அங்கு நடந்த விஷயங்கள் பிரதமரின் கவனத்தில் உள்ளது. அங்கு நிறைய தூண்டுதல்கள் உள்ளது. திட்டமிட்டு அங்கு பிரச்சினை நடக்கிறது. பிரதமர் சென்றால் பிரச்சினை வரும். ஆறுதல் சொல்வதில் நம்பிக்கை இல்லாத பிரதமர் தீர்வை நோக்கி பயணிக்கிறார். மணிப்பூரில் கலவரம் வெடித்த நிலையில் நிறைய பேர் அங்கு ஊடுருவி உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து கூட அங்கு ஊடுருவி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. திட்டமிட்டு அவர்கள் கலவரத்தை தூண்டியுள்ளனர். இதற்கான ஆதரங்கள் விரைவில் வெளியாகும்" என பேசி இருக்கிறார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications