21-09-2016.. ஜெயலலிதாவின் கடைசி நாள்.. கடைசி நிகழ்ச்சி.. கடைசி பேச்சு.. கடைசி தருணம்.. உருக்கும் வீடியோ
ஜெயலலிதா கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி வீடியோ வைரலாகிறது
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல் நலம் பாதித்த 2016, செப்டம்பர் 22-ந்தேதி அதாவது இன்றைய தினம் அதிமுகவினருக்கு கருப்பு நாளாகும்... இதையடுத்து, அவர் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சியை இணையத்தில் பதிவிட்டு அதிமுகவினர் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
ஜெயலலிதா ஏன் இறந்தார்? 74 நாட்கள் ஆஸ்பத்திரியில் என்ன நடந்தது? என்பதற்கான மர்மங்கள் இன்றுவரை அடங்கவில்லை.
அவரது மரணம் எப்படி நடந்தது என்பதும் இதுவரை தெரியவில்லை. என்றைக்காவது உண்மை வெளியே வரும் என்று அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் இன்னமும் நம்பி கொண்டிருக்கிறார்கள்.

அக்கறை
ஆரம்பம் முதல் கடைசிவரை அரசியலில் அதீத அக்கறையுடனும் வீரியத்துடனும் செயல்பட்டவர் ஜெயலலிதா.. கிட்டத்தட்ட 35 வருடங்கள் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்தார்.. இப்படிப்பட்டவருக்கு அப்படி ஒரு மரணம் என்ற அதிர்ச்சி இன்னமும் விலகவில்லை.. இந்தியாவிலேயே ஒரு மாநில முதல்வரின் மரணத்துக்கான விடையும் இன்னமும் கிடைக்கவில்லை.

சிகிச்சை
இறப்பதற்கு 10 வருடங்களுக்கு முன்பிருந்தே அவருக்கு உடல்நலம் சரியில்லாமல்தான் இருந்தது.. அதற்குரிய சிகிச்சைகள் அவர் எடுத்து கொண்டு வந்தாலும் 2015-ல் இருந்துதான் உடல் நலிவடைய ஆரம்பித்தது.. அப்போதும் சிகிச்சை எடுத்தாலும், அது முறையான சிகிச்சைதானா? ஏன் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அவருக்கு தரப்படவில்லை என்பதும் கேள்வியாக எழுகிறது. இன்றுதான் ஜெயலலிதா அப்போலோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நாள்.. அதற்கு முந்தைய நாள் 21-ம்தேதி அன்றுகூட காலை ஜெயலலிதா பங்கேற்ற அரசு விழா நடந்தது...

பச்சை நிற சேலை
சென்னை, சின்னமலை - விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க நிகழ்ச்சிதான் ஜெயலலிதா பங்கேற்ற கடைசி அரசு நிகழ்ச்சி. ஆனால், நேரில் செல்லவில்லை. தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே சென்னை சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலான 2-வது கட்ட மெட்ரோ ரெயில் போக்குவரத்தை கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். சின்னமலையில் நடந்த விழாவில் மத்திய அமைச்சராக இருந்த வெங்கய்யா நாயுடு நின்று கொடி அசைத்தார்.

போக்குவரத்து
தலைமை செயலகத்தில் ஜெயலலிதா பச்சை கலர் சேலையில், பச்சை கொடியை காட்டி போக்குவரத்தை துவக்கி வைத்ததுதான் வீடியோவாக இப்போதுவரை பதிவிட்டு வருகின்றனர் அதிமுகவினர்.. அந்த நிகழ்ச்சிக்கு வரும்போதே மெதுவாகவே நடந்து வந்தார்.. யாருடைய உதவியும் இல்லாமல் மெல்ல நடந்து வந்து அங்கிருந்தோருக்கு வணக்கம் சொன்னார்.. பார்ப்பதற்கு தளர்ச்சியாக காணப்பட்டார்.. ஆனாலும் முகம் மலர்ச்சியாகவே இருந்தது..

வெங்கய்யா நாயுடு
இந்த விழாவில் வெங்கய்யா நாயுடுவுடன் சேர்ந்து கலந்து கொள்வதாக இருந்தது... ஆனால் உடல் நலக்குறைவு காரணமாகவே சின்னமலைக்கு போகாமல் தலைமை செயலகத்துக்கு வந்தார். விழா தொடங்குவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பே அவர் வருகை தந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால், இன்னும் வெங்கையா நாயுடு சின்னமலைக்கு வரவில்லை, வந்து கொண்டிருக்கிறார் என்று சொன்னதும், வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்..

கொடியசைத்தார்
வெங்கையா நாயுடு வந்துவிட்டார் என்ற தகவல் கிடைத்ததும் மெட்ரோ நிகழ்ச்சியில் ஜெயலலிதா பங்கேற்றார்.. பிறகு நிகழ்ச்சியை கொடியசைத்து துவக்கி வைத்து பேசினார்.. வெறும் 6 நிமிடங்கள்தான் பேசினார்.. "சென்னையைஅதி நவீன நகரமாக மாற்ற வேண்டும் என்பது என்னுடைய கனவு, அந்த கனவு கொஞ்சம் கொஞ்சமாக நனவாகி வருகிறது" என்று பெருமிதத்துடன் பேசினார் ஜெயலலிதா.

கடைசி தருணம்
ஜெயலலிதாவை பொதுமக்கள் பார்த்த கடைசி தருணம் அதுதான்.. மறுநாள் 22-ம்தேதி காலைவரை கூடத் திட்டங்களை தொடங்கி வைத்துக்கொண்டிருந்தார்.. தேர்தல் அறிக்கையில் அறிவித்த தாலிக்கு 8 கிராம் தங்கம் திட்டம் அவற்றில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது... அந்த அறிவிப்பை செயல்படுத்தி செப்டம்பர் 22-ம் தேதி காலை, தாலிக்கு 8 கிராம் தங்கத்துடன், உதவித்தொகையை 12,500 பயனாளிகளுக்கு வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

கருப்பு தினம்
அன்றைய தினம் இரவு உடல்நலம் அவருக்கு மேலும் மோசமடைந்துள்ளது.. 11.30 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தகவலானது, மறுநாள் 23-ம்தேதி தான் தமிழக மக்களுக்கு தெரியவந்தது.. தமிழ்நாடே பரபரப்பானது.. காய்ச்சல் என்றுதான் அன்றைய தினம் தகவல் வெளியானது.. பிறகு சுகர் அதிகமாகிவிட்டது என்றார்கள்.. பிறகு மூச்சுவிட சிரமம் என்றார்கள்.. இதற்கு பிறகு அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்ததை தமிழகமே அதிர்ந்து போய் பார்த்து கொண்டிருந்தது. இப்படியே 74 நாட்கள் முடிந்தும்விட்டது.. ஜெயலலிதாவுக்கு என்னதான் நடந்தது? எப்படித்தான் உயிரிழந்தார்? என்பதற்கான மர்மம் மட்டும் இன்னமும் அப்படியேதான் உள்ளது..!
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications