கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் கருப்புக் கொடி!
சென்னை: சென்னை கோபாலபுரத்தில் கருணாநிதியின் இல்லத்தில் கருப்பு கொடி ஏற்றி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது தொடர்பாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில், கடந்த மாதம் 20 ஆம் தேதி, எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நடைபெற்றது.
இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட 19 கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

ரத்து செய்ய கோரிக்கை
இந்த கூட்டத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோருவது, பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயுக்களின் விலையை குறைக்கக் கோருவது, பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் கருப்பு கொடி போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கருப்புக் கொடி போராட்டம்
சுமார் 10 நாட்கள் நடைபெறும் இந்த போராட்டத்தில் இன்றைய தினம் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தங்கள் வீடுகள், அலுவலகங்கள் முன்பு கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு அந்த போராட்டமானது தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

வைகோ போராட்டம்
அது போல் சென்னை சிஐடி காலனியில் உள்ள திமுக எம்பி கனிமொழி வீட்டிலும் இந்த போராட்டத்தை அவர் நடத்தினார். அது போல் ஸ்ரீபெரும்பதூர் எம்பி டிஆர் பாலு தாம்பரத்தை அடுத்த பீர்க்கங்கரணையில் போராட்டம் நடத்தினார். அண்ணாநகரில் தனது வீடு முன்பு கருப்புக் கொடி ஏந்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போராட்டம் நடத்தினார். அண்ணா அறிவாலயத்தில் ஆ ராசா தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் திருச்சி, கமுதி, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் திமுகவின் மூத்த தலைவர்களும் நிர்வாகிகளும் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தி னர்.

மக்கள் நலன்
அந்த வகையில் மக்கள் விரோத திட்டங்களுக்கு எப்போதுமே எதிர்ப்பு தெரிவித்து, ஏழை எளிய மக்களின் நலனுக்காகவே கடைசி வரை போராடிய திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மறைந்த கருணாநிதியின் வீட்டிலும் மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டின் வெளியே கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications