சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கருப்பு பூஞ்சை நோய்.. 30000 மருந்து குப்பிகள் உடனே வழங்க வேண்டும்.. மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த 30000 மருந்து குப்பிகளை உடனே வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்ர் ஹர்ஷ்வர்தனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

Recommended Video

    Black Fungusக்கு தனி Ward! Chennai ஓமந்தூரார் மருத்துவமனையில் ஆரம்பம்

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள அந்த கடிதத்தில் தமிழ்நாட்டில் இதுவரை 673 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த கூடுதலாக மருந்து குப்பிகளை மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

    Black fungus: 30000 medicine Vials should be provided immediately : mk stalin

    கருப்பு பூஞ்சை மருந்தான ஆம்போடெரிசின்-பி மருந்து குப்பிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.'

    கருப்பு பூஞ்சைக்கு என்ன காரணம்:

    கருப்பு பூஞ்சை நோய் கண், நுரையீரலை அதிகம் பாதிக்கிறது. கரோனா நோயாளிகளில் கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் உட்கொண்டவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

    இந்தியாவில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் 2 பங்கு பேர் சர்க்கரை நோயாளிகள் ஆவர். உலகளாவிய அளவில் 17 லட்சம் மக்கள் தொகையில் 0.005 சதவீதம் பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதித்துள்ளது இந்தியாவில் 1,000 பேரில் 0.14 சதவீதம் பேருக்கு இந்த தொற்று ஏற்படுகிறது. சர்வதேச புள்ளிவிவரத்தை ஒப்பிடும்போது, இந்தியாவில் 80 சதவீதம் அளவுக்கு அதிக கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு உள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவில் சுமார் 7,000-க்கும் மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    English summary
    Tamilnadu chief minister mk Stalin's letter to Central Government, He demands 30000 medicine Vials of Black fungus should be provided immediately to tamilandu .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X