Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதற்குத்தான் டைடல் பார்க் வேணும்னு சொல்றது.. வேலூரில் ஒரே இரவில் நடந்த தரமான சம்பவம்.. ஐடி புரட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேலூர் நியோ டைடல் பார்க் நேற்று முதல்நாள் திறக்கப்பட்டது. இந்தக் கட்டிடத்தில் உள்ள அனைத்து இடங்களையும் பிளாக்ஸ்டோன் நிறுவனத்தின் ஆதரவு பெற்ற ஏஜிஎஸ் ஹெல்த்கேர் நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது. இது வேலூர் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் என்று கூறப்படுகிறது.

இந்த டைடல் பார்க் 60,000 சதுர அடிக்கு மேல் பரப்பளவைக் கொண்டுள்ளது. மேலும், ஒரே நேரத்தில் 600 பேர் அமர்ந்து பணிபுரியும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மட்டும் முழு இடத்தையும் குத்தகைக்கு எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒரே நாளில் அந்த பகுதி அடியோடு மாறி உள்ளது.

madurai

வேலூர் போன்ற நகரங்களில் இது போன்ற பெரிய வணிக அமைப்புகள், ஐடி பார்க்குகள் தேவை அதிகம் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களுக்கும் அதிக எண்ணிக்கையிலான வணிக, ஐடி பூங்காக்கள் தேவைப்படுகின்றன. இதன் மூலம் வேலைவாய்ப்புகளும், பொருளாதார வளர்ச்சியும் பெருகும்.

மினி டைடல் பூங்கா

வேலூர் மாவட்டம் மேல்மொனவூர் அரசு ஐ.டி.ஐ வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள மினி டைடல் பூங்காவை நேற்று முதல்நாள்தான் முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்தார்

வேலூருடன் சேர்த்து விழுப்புரம், திருப்பூர் மற்றும் தூத்துக்குடியிலும் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்க கடந்த சில மாதங்களுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிலையில் இன்று வேலூர் டைடல் பூங்கா கட்டுமானம் முடிந்து திறக்கப்பட உள்ளது. இந்த திட்டங்களை தொழில்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயல்படுத்துகிறது.

அடுத்தடுத்து வரும் டைடல் பார்க்குகள்

TIDEL நிறுவனம் ஈரோட்டில் புதிய TIDEL Neo பூங்காவை அமைக்க முடிவு செய்து உள்ளது. இந்த திட்டத்திற்காக வடிவமைப்பு பொறியியல் மற்றும் திட்ட மேலாண்மை ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கு ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளது.

ஈரோடு மாவட்ட அனைத்து வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு (FATIA), ஈரோட்டில் புதிய நியோ-டைடல் பூங்கா அமைக்கும் மாநில அரசின் சமீபத்திய அறிவிப்பை வரவேற்றுள்ளது.

முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கூட்டமைப்பின் தலைவர் வி.கே. ராஜமாணிக்கம் மற்றும் பொதுச் செயலாளர் பி. ரவிச்சந்திரன் ஆகியோர் கூட்டாக எழுதிய கடிதத்தில், சமீபத்திய பட்ஜெட்டில் ஈரோட்டில் ஒரு லட்சம் சதுர அடியில் இந்த பூங்கா அமையவுள்ளதாகவும், இதன் மூலம் 4,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அரசு அறிவித்திருந்தது குறித்து குறிப்பிட்டனர். "மாவட்டத்தில் அதிக பொறியியல் கல்லூரிகள் இருப்பதால், இந்த பூங்கா பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும்" என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் டைடல் பார்க்

இது போக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே எடப்பள்ளியில் எட்டு ஏக்கர் பரப்பளவில் புதிய மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. இந்தப் பூங்கா சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கும் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளைக் கொண்டு வரும் வகையில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டில் சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் விழுப்புரம் ஆகிய நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் தொடங்கப்பட்டன. மேலும், தரமணி மற்றும் கோயம்புத்தூருக்குப் பிறகு, மாநிலத்தின் மூன்றாவது முழு அளவிலான டைடல் பூங்காவான ஆவடி பட்டாபிராம் டைடல் பூங்காவும் திறக்கப்பட்டது. தற்போது மதுரை, திருச்சி, திருப்பூர் மற்றும் காரைக்குடி ஆகிய இடங்களில் டைடல் பூங்காக்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாத தொடக்கத்தில் திருவண்ணாமலையில் நியோ டைடல் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

மினி டைடல் பார்க்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கான டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. அத்துடன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் விருதுநகர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

நீலகிரியில் அமையவுள்ள டைடல் பூங்கா, டிபிஎஃப்ஓடி (DBFOT) அடிப்படையில் 45 வருட சலுகை காலத்துடன் செயல்படுத்தப்பட உள்ளது. திருப்பூரில் உள்ள ராக்கியபாளையம் பகுதியில் சமீபத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்ட டைடல் நியோ பார்க் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், நீலகிரி டைடல் பூங்கா குறித்த இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+