சந்திர கிரகணம் முழுமையாக நிறைவு.. 7 ஆண்டுகளுக்கு பின் தோன்றிய வானியல் அதிசயம்.. வியந்த மக்கள்!
சென்னை: "ரத்த நிலா" சந்திர கிரகணம் எனும் வானியல் அதிசயத்தை பொதுமக்கள் கண்டு வியந்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு 9.37 மணிக்கு சந்திர கிரகணம் நிகழத் தொடங்கிய நிலையில், 11 மணியளவில் முழு கிரகணத்தை எட்டியது. மொத்தமாக 85 நிமிடங்கள் வானில் தோன்றிய இந்த வானியல் அதிசயத்தில் இந்தியா முழுவதும் பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர். இறுதியாக நள்ளிரவு 1.27 மணிக்கு சந்திர கிரகணம் முழுமையாக நிறைவடைந்தது.
சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோர்ட்டில் வரும் போது, பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால் ஏற்படும் வானியல் அதிசயமே சந்திர கிரகணமாகும். அது தற்போது நிகழ்ந்து வருகிறது. இரவு 9.57 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கிய நிலையில், நள்ளிரவு 1.27 மணி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழு கிரகணம் 11.42 முதல் 12.33 மணி வரை இருக்கும்.

இதன் மூலம் மொத்தமாக 85 நிமிடங்கள் சந்திர கிரகணம் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திர கிரகணத்தின் போது சந்திரன் ரத்த நிறத்தில் காணப்படும். ரத்த நிறத்தில் ஜொலிக்கும் என்பதால், அதனை Blood Moon என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். நள்ளிரவு 2.25 மணிக்கு பின் புற நிழல் பகுதியில் இருந்து நிலா வெளியேறும்.
வானியல் நிகழ்வாக இருக்கும் சந்திரன் கிரகணம், இந்தியாவில் ஆன்மீக நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா முழுவதும் கோயில்கள், பூஜைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த ரத்த நிலாவை பார்க்க பொதுமக்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னையில் மட்டும் 10 இடங்களில் ரத்த நிலாவை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சூரிய கிரகணத்தை வெறும் கண்களில் பார்க்க முடியாது. ஆனால் சந்திர கிரகணத்தை வெறும் கண்களிலேயே பார்க்கலாம். அதனால் எந்தவித பிரச்சனையும் வராது. இந்தியா மட்டுமல்லாமல் ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா உள்ளிட்ட கண்டங்களில் உள்ள நாடுகளில் உள்ள மக்கள் ரத்த நிலாவை ரசித்து வருகின்றனர்.
2022ஆம் ஆண்டுக்கு பின் நிகழும் நீண்ட சந்திர கிரகணமாக இது அமைந்துள்ளது. அதேபோல் மீண்டும் இதேபோன்ற சந்திர கிரகணத்தை காண வேண்டும் என்றால், அதற்கு 2028 டிசம்பர் 31ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கடற்கரைகளில் குவிந்து ரத்த நிலாவை பார்த்து வியந்து வருகின்றனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications