பவன் கல்யாணுடன் கூட்டணி வைங்க! ஜோடி பொருத்தம் பிரமாதம்! தவெகவை கிண்டல் செய்த ப்ளூசட்டை மாறன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக, பாஜகவை தவிர்த்து கூட்டணி வைப்பதாக தவெக சொல்லி வரும் நிலையில், பவன் கல்யாண், பிரசாந்த் கிஷோருடன் கூட்டணி வைங்க என ப்ளூசட்டை மாறன் கிண்டல் செய்துள்ளார்.

இதுகுறித்து ப்ளூசட்டை மாறன் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இக்கட்சி சார்பில் ஏதாவது ஒரு அறிக்கையாவது தெளிவாக வருமென பார்த்தால்.. அது நடந்தபாடில்லை.

blue sattai maran vijay tvk

* உங்கள் கொள்கை எதிரி பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது.

* காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உங்கள் அரசியல் எதிரி திமுகவுடன் உளாளன.

* பெரியார், அம்பேத்கரை கொள்கை தலைவர்களாக வைத்துள்ள நீங்கள்.. பாமகவுடன் கூட்டணி அமைக்க இயலுமா?

* நாம் தமிழர் கட்சிவழக்கம்போல தனித்து நிற்கப்போவதாக அறிவித்து விட்டது.

* பல இஸ்லாமிய கட்சிகள் மற்றும் அமைப்புகள் உங்களுடன் சேரவில்லை.

* பிறகு யாரை கூட்டணி க்கு அழைக்கிறீர்கள்?

* ஆட்சியில் பங்கு. அதிகாரத்தில் நுங்கு என பல மாதமாக கூவியும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

* தைரியம் இருந்தால் தனித்து போட்டியிடுங்கள் அல்லது உங்கள் தீம் பார்ட்னர்களான அதிமுக பாஜக அணியில் சேருங்கள்.

* அதைவிட்டுவிட்டு பாசிசம், பாயாசம் என கூவுவதால் எந்த கூட்டணியும் அமையாது.

* வேண்டுமெனில் ப்ரசாந்ந் கிஷோரின் ஜன்சுராஜ் மற்றும் பவன் கல்யாணிண் ஐனசேனாவுடன் பான் இண்டியா கூட்டணி அமையுங்கள்.

* சோடிப் பொருத்தம் பிரமாதமா இருக்கும். இவ்வாறு ப்ளூசட்டை கிண்டலாக தெரிவித்தார்.

கடம்பூர் ராஜூ, நயினார் நாகேந்திரன் ஆகியோர் விஜய் கட்சியை கூட்டணிக்கு அழைத்து குறித்து தவெக கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் கூறியிருப்பதாவது: திமுக, பாஜகவை தவிர்த்து வேறு எந்த கட்சி வந்தாலும் கூட்டணி அமைக்கத் தயார். பாசித்தோடும் பாயாசத்தோடும் எங்களுக்கு கூட்டணி கிடையாது என்பதில் உறுதியாக உள்ளோம்.

எங்கள் கோட்பாடுகளை ஏற்று யார் வந்தாலும் அவர்களுடன் கூட்டணி வைக்கத் தயார் என தெரிவித்திருந்தார்.

அண்மையில் கூட விஜய் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெளிவில்லை என்று ப்ளூசட்டை மாறன் விமர்சித்திருந்தார். அந்த ட்வீட்டில் வழக்கம்போல பனையூர் மண்டப ஆஸ்தான புலவர் பக்கம் பக்கமா எழுதித்தந்த இன்றைய அறிக்கையில் கையெழுத்து மட்டும் போட்டுள்ளார் ஜனநாயகர்.

இவரது 2 பக்க அறிக்கையில் ஆங்காங்கே ஸ்டாலின் எனும் வார்த்தை உள்ளது‌ ஆனால் மோடி எனும் வார்த்தை இல்லை‌.

ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்பட்ட மாநிலங்களின் முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கடைசி பேராவில் உளறி இருக்கிறார்.

பாஜக கூட்டணியில் உள்ள நிதீஷ்குமார் மற்றும் புதுவை முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

இதற்கு என்ன அர்த்தம்?

உங்களின் ஒரு அறிக்கையாவது தெளிவாக வராதா? ஏன் இந்த தமாசு? என கேள்வி எழுப்பியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+