ஆம்ஸ்ட்ராங்கை நாங்கள் ஒன்றும் செய்யலை! என் கணவர் உயிருக்கு அச்சுறுத்தல்! பாம் சரவணன் மனைவி பகீர்
சென்னை: பிரபல ரவுடி பாம் சரவணனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது மனைவி மகாலட்சுமி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து பாம் சரவணனின் மனைவி மகாலட்சுமி நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எனது கணவர் சரவணன் நேற்றைய தினம் ஆந்திராவில் அவர் கைது செய்ததாக சொல்லப்படுகிறது. அவரை சுட்டு பிடித்ததால் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

24 மணி நேரமாகியும் இதுவரை எனக்கு துறை ரீதியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என தெரியவேண்டும்.
மேலும் அவரை எதற்காக கைது செய்தார்கள் என்பது குறித்து அறிவிக்க வேண்டும். அவர் மீது 10 ஆண்டுகளாக எந்த புதிய வழக்குகளும் இல்லை. சமூகவலைத் தளங்களில் சரவணன் குறித்து தப்புத்தப்பாக போட்டு வருகிறார்கள். போலீஸார் எதற்காக சரவணனை கார்னர் செய்கிறார்கள் என தெரியவில்லை. எனவே அவர் எங்கே இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள ஒரு புகார் கொடுத்துள்ளேன்.
எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக இரு ஆண்டுகளுக்கு முன்பு காவல் துறை எங்களுக்கு எச்சரிக்கை கொடுத்ததால் நான் என் குழந்தைகளுடன் வெளியூரில் போய் செட்டிலாகிவிட்டேன். குழந்தைகள் வெளியூரில் படிக்கிறார்கள். பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்தேன். அப்போதுதான் சரவணனை சுட்டு பிடித்துள்ளதாக தகவல் அறிந்து காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுக்க வந்தேன்.
சரவணனுக்கு ஏற்கெனவே காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. போலீஸார்தான் அவரது காலை உடைத்துள்ளனர். அவருக்கு சர்க்கரை நோய் இருந்ததால் அது அப்படியே இன்ஃபெக்ஷன் ஆகிவிட்டது. அதற்கான சிகிச்சையும் அவர் எடுத்து வருகிறார்.
ஆம்ஸ்ட்ராங் அண்ணன் இறந்ததை எண்ணி நாங்கள் தினமும் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறோம். அவரை என் கணவர் கொலை செய்யும் அளவுக்கு எந்த உள்நோக்கமும் எங்களுக்கு இல்லை.
எதிர்தரப்பினர்தான் ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் எங்கள் மீது பழி சுமத்துகிறார்கள். போலீஸாரையும் தவறாக பயன்படுத்துகிறார்கள். என் கணவர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அவரை ஏன் கைது செய்தார்கள் என்றுகூட எங்களிடம் போலீஸார் தெரிவிக்கவே இல்லை. ஆம்ஸ்ட்ராங்கை தனது சொந்த அண்ணனாகவே சரவணன் நினைத்தார். இவ்வாறு மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.
சென்னை புளியந்தோப்பு வெங்கடேசபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன் (41). பிரபல ரவுடியான இவர் மீது 6 கொலை வழக்குகள், 2 வெடிகுண்டு வீசிய வழக்கு உள்பட மொத்தம் 26 வழக்குகள் உள்ளன. இதுவரை இவரை 3 வழக்குகளில் பிடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததது.
அவர் தலைமறைவான நிலையில் சென்னை காவல் துறை பல்வேறு இடங்களில் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். அந்த வகையில் பாம் சரவணனை ஆந்திர மாநிலம் சித்தூர் வட்டத்தில் வரதப்பாளையம் பகுதியில் துப்பாக்கி முனையில் சுட்டு பிடித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications