ஆவடி பீரங்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்.. ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றம்!
சென்னை: ஆவடியில் இயங்கி வரும் மத்திய அரசுக்கு சொந்தமான பீரங்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருக்கிறது. இதனால் ஊழியர்கள் அவசர அவசரமாக ஆலையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.
சமீப காலமாக விமானங்களுக்கும், பள்ளிகளுக்கும் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.

மத்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் ஏவிஎன்எல் என்ற பொதுத்துறை நிறுவனம் ஆவடியில் செயல்பட்டு வருகிறது. இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் பீரங்கிகள் இங்குதான் உற்பத்தி செய்யப்படுகின்றன. பரபரப்பாக இயங்கி வரும் இந்த ஆலைக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஊழியர்கள் அதிகாரிகள் என பலரும் ஆலையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.
தமிழக காவல்துறையின் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் ஆலையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆலைக்குள் ராணுவ தளவாடங்கள் அதிகம் இருப்பதால் வெடிகுண்டு அச்சுறுத்தல் மிகவும் சீரியஸானதாக பார்க்கப்படுகிறது. எனவே மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சமீப காலமாக விமானங்களுக்கும், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்திய அரசுக்கு கடுமையான பொருளாதார இழப்புகள் ஏற்பட்டு வருகிறது. விமானங்கள் தாமதமாவது, விமானங்கள் ரத்து செய்யப்படுவது போன்ற பிரச்சனைகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் முக்கிய காரணமாக இருக்கிறது. அதேபோல தொடர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்புக்காக ஒதுக்கப்படும் செலவுகளும் அதிகரித்துள்ளன.
மறுபுறம் மிரட்டல் காரணமாக பள்ளிகளின் செயல்பாடுகள் முடங்குகின்றன. டெல்லி, பெங்களூரு தொடங்கி சென்னையில் உள்ள பள்ளிகளுக்கும் கூட வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications