Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திரிஷா வீட்டில் வெடிகுண்டு.. கொஞ்ச நேரத்தில் வெடிக்கும்! 4வது முறையாக டிஜிபி ஆபீஸுக்கு வந்த மெயில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில தினங்களாகவே தமிழகத்தில் உள்ள பிரபல நடிகர்கள், அரசியல் தலைவர்கள், வெளிநாடுகளின் தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை திரிஷாவின் வீட்டிற்கு நான்காவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மெயிலில், திரிஷாவின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் சோதனை நடத்தப்பட்டதில் அது வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது.

சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு நேற்று மின்னஞ்சல் ஒன்று வந்திருக்கிறது. அதில் பிரபல நடிகையான திரிஷாவின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், இன்னும் சற்று நேரத்தில் அது வெடித்து சிதறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Actress Trisha Bomb Threat crime

இதை அடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை திரிஷாவின் வீட்டில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். மோப்பநாய் உதவியுடன் நடத்தப்பட்ட அந்த சோதனையில் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.

கடந்த சில தினங்களாகவே சென்னையில் உள்ள பிரபல நடிகர்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சி அலுவலகங்கள், வெளிநாடுகளின் தூதரகங்களுக்கு வெடிகுண்டு வெடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் நடிகை திரிஷாவின் வீட்டுக்கு மட்டும் இதுவரை நான்கு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் வந்த வெடிகுண்டு மிரட்டல் திரிஷாவின் வீடு மட்டுமல்லாது இயக்குநர் மணிரத்தினம், நடிகர் விஷால், சிபிஐ அலுவலகம், அமலாக்கத்துறை அலுவலகங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் அது புரளி என தெரிய வந்தது. இது மட்டுமல்லாமல் நடிகர் ரஜினிகாந்த், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக நிறுவனர் ராமதாஸ், அண்ணா மேம்பாலம் அருகே இருக்கும் அமெரிக்க தூதரகம், பட்டினப்பாக்கம் சாலையில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஒவ்வொரு நாள் காலையிடும் சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது தொடர் கதையாகி உள்ளது.

ஒரே நபர் கொலை மிரட்டல், வெடிகுண்டு மிரட்டல் விடுகிறாரா அல்லது குழுவாக செயல்படுகிறார்களா என தெரியாமல் சைபர் கிரைம் போலீசார் திணறி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் மிரட்டல் இமெயில் வருவதும் அதிகாரிகள் சோதனை நடத்துவதும் தொடர்ந்து தொடர்வதையாகி வருகிறது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர் போலியான ஈமெயில் முகவரிகளை பயன்படுத்தி வருகிறார். மேலும் விபிஎன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதால் அவரது இருப்பிடத்தை கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கிறது என போலீசார் கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதே நேரத்தில் கிட்டத்தட்ட வெடிகுண்டு மிரட்டல் எடுக்கும் நபரின் அடையாளத்தை போலீசார் கண்டறிந்து விட்டதாகவும் விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் புரளிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்கின்றனர் போலீசார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+