எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பரபரத்த சென்னை கிரீன்வேஸ் சாலை! அதிரடி சோதனை
சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்.
அதேபோல, சென்னை தி.நகர் திலக் தெருவில் உள்ள பாமக அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அங்கும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. மத வழிபாட்டு தலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீடு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீடு, நீலாங்கரையில் உள்ள விஜய் வீடு, அமெரிக்க தூதரக அலுவலகம், சென்னை விமான நிலையம் என பல இடங்களுக்கும் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.
சென்னையில் உள்ள குடியரசு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணனின் வீட்டுக்கு இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்நிலையில் தான், இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கும், சென்னை தி.நகர் திலக் தெருவில் உள்ள பாமக அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்.












Click it and Unblock the Notifications