சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! நள்ளிரவில் சல்லடை போட்டு தேடிய நிபுணர்கள்!
சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து சோதனை செய்ததில் அது புரளி என தெரியவந்தது. கடந்த இரு வாரங்களில் 5ஆவது முறையாக வந்த வெடிகுண்டு மிரட்டல் இது!
தமிழகத்தில் பள்ளிகள், கோயில்கள், விமான நிலையம் என பொதுமக்கள் கூடும் இடங்களில் எல்லாம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் பெற்றோரும் பக்தர்களும் பயணிகளும் அலறி அடித்துக் கொண்டு ஓடும் நிலை ஏற்படுகிறது.

இது குறித்து தகவலறிந்து சோதனை செய்தால் அது புரளி என தெரியவருகிறது. அந்த வகையில் சென்னை விமான நிலையத்திற்கு கடந்த இரு வாரங்களாக வெடிகுண்டு மிரட்டல் 4 முறை வந்துள்ளது. இன்றும் கூட 5ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கு நள்ளிரவில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புகாரின் பேரின் வெடிகுண்டை செயலழிக்க வைக்கும் நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் வந்து சோதனை செய்தனர்.
அப்போது அந்த மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதுபற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக, இதுபோன்ற வெடிகுண்டு புரளிகள் தொடர்ச்சியாக வருகிறது. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பு சோதனைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
இதனால், விமான சேவைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. விமானங்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. வெடிகுண்டு புரளியில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர். இரு நாட்களுக்கு முன்னர் கூட சென்னை மாங்காட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications