முதல்வர் எடப்பாடியார் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: திருப்பூரில் இருந்து போன் போட்டு புரளி!
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சென்னை, சேலம் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு எழுந்துள்ளது.
Recommended Video

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சென்னை பசுமை வழிச் சாலையில் அரசு பங்களா உள்ளது. அது போல் அவரது சொந்த மாவட்டமான சேலத்திலும் அவருக்கு சொந்த வீடு உள்ளது.

இந்த நிலையில் இந்த இரு வீடுகளிலும் வெடிகுண்டு வைத்ததாக மர்ம நபர் ஒருவர் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் முதல்வரின் சேலம் இல்லத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் இன்று காலை சோதனை செய்தனர்.
சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. அது போல் சென்னையிலும் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து பொய்யான தகவல் அளித்த நபர் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருப்பூரை சேர்ந்தவர் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
முன்னதாக நடிகர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட சினிமா பிரபலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து முதல்வர் எடப்பாடியின் இல்லத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. விசாரணையில் சேலையூரைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர்தான் மிரட்டல் விடுத்தது என்பது தெரியவந்தது. விசாரணையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு குறித்த புகாரை காவல் துறையினர் ஏற்கவில்லை.
இதனால் தன்னுடைய செல்போனில் இருந்து 19 முறை முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறிப்பிடத்தக்தது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications