முதல்வர் ஸ்டாலின், நடிகர் அஜித், குஷ்பு வீடு என 11 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! அதிர்ந்த சென்னை
சென்னை: சென்னையில் முதல்வர் ஸ்டாலின், நடிகர் அஜித் வீடு உள்பட 11 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் அரவிந்த் சாமி, லிவிங்ஸ்டன், இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு நேற்று காலையில் மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் நபர்களை நெருங்கிவிட்டதாகவும், விரைவில் பிடிக்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள் என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

வெடிகுண்டு மிரட்டல்
தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக நேற்று காலையில் காமாட்சி செல்வகணேஷ் என்ற பெயரில், சென்னையில் உள்ள டி.ஜி.பி அலுவலகத்திற்கு 'இ - மெயில்' வந்துள்ளது. அதில் அந்த நபர், 'சென்னை ஆழ்வார்பேட்டை சித்த ரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன என்று மட்டும் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து போலீசார் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று சோதனை நடத்தினர். காலை 10 மணி முதல் 11 மணி வரை என 1 மணி நேரம் போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். ஆனால் எந்த ஒரு வெடிகுண்டுகளும் கைப்பற்றப்படவில்லை. இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
மீண்டும் மிரட்டல்
இதையடுத்து மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் மீண்டும் நேற்று இரவு முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. இதேபோல் நடிகர் அஜித் குமார், லிவிங்ஸ்டன், இசையமைப்பாளர் கங்கை அமரன், அரவிந்த் சாமி, இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ், திண்டுக்கல் ஐ லியோனி, செஸ் வீரர் பிரக்ஞானந்தா, நடிகை குஷ்பு சுந்தர், திருப்பதி நாராயணம், அமலாக்கத்துறையில் இருக்கக் கூடிய சிஆர்பிஎப் அலுவலகம் என மொத்தம் 11 இடங்களில் வெடிகுண்டு இருப்பதாக மெயில் வந்துள்ளது.
இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட காவல்நிலையங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையிலும் சந்தேகப்படும்படியான எந்த ஒரு பொருளும் பிடிபடவில்லை.
விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்து. தொடர்ந்து அரசியல் தலைவர்கள், நடிகர்கள் வீட்டுக்கு வரும் வெடிகுண்டு மிரட்டல்கள் வரும் நிலையில் இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்றும், கிட்டத்தட்ட மிரட்டல் விடும் நபரை நெருங்கிவிட்டதாகவும் சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்து இருந்தார்.
கடந்த சில நாட்களாகவே முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், ஆளுநர் மாளிகை, நடிகர் விஜய், அஜித், நடிகை திரிஷா என பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ்












Click it and Unblock the Notifications