சென்னை, கோவையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் வெடி குண்டு மிரட்டல்.. பெற்றோர்கள் அதிர்ச்சி
சென்னை: சென்னை மற்றும் கோவையில் உள்ள பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து பள்ளியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை போரூர் அடுத்த மாங்காடு செருகம்பாக்கத்தில் உள்ள பி.எஸ்.பி.பி பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு வழக்கம் போல் இன்று மாணவர்கள் வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், இந்த பள்ளிக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், போலீசார் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் பள்ளியில் வந்து சோதனையிட்டு வருகின்றனர். இதேபோல் மோப்ப நாயும் கொண்டு வரப்பட்டு வெடிகுண்டு இருக்கிறதா என போலீசார் சோதனை செய்து வருகின்றனர். முன்னதாக பள்ளிக்கு வந்திருந்த மாணவ மாணவிகளை பாதுகாப்பு கருதி வெளியே அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து போலீசார் பள்ளி வளாகம், பள்ளிக்கூட பஸ்கள், வராண்டாக்கள் என பள்ளி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் கோவையில் உள்ள ஒரு பள்ளிக்கும் நேற்று நள்ளிரவில் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தினர் இரவே போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் நேற்று நள்ளிரவில் இருந்து போலீசார் பள்ளியில் சோதனை செய்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக ஒரு மின்னஞ்சல் வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர சோதனையில் அது புரளி என்பது தெரியவந்தது. எனினும் யார் இந்த மிரட்டலை விடுத்தது என்பது இது வரை போலீசர் கண்டுபிடிக்கவில்லை. இந்த நிலையில், இரண்டாவது முறையாக இன்றும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதால் பெற்றோர்கள் அதிச்சியடைந்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications