ஆண்மையில்லாதவர் என்று சொன்ன மனைவி.. கோபத்துடன் கோர்ட்டுக்கு போன கணவர்.. நீதிபதி தந்த உத்தரவு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமணமாகி வெறும் 17 நாளிலேயே கணவரை விட்டு பிரிந்து சென்ற பெண், விவகாரத்து கேட்ட வழக்கு நினைவிருக்கிறதா? அதுபோலவே இப்போதும் ஒரு விவாகரத்து வழக்கு மும்பை ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறார்.. இந்த உத்தரவுதான் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.. என்ன நடந்தது மகாராஷ்டிராவில்?

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, மகாராஷ்டிரா மாநில தம்பதிகளுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பானது பலரது கவனத்தையும் பெற்றது..அதாவது, அங்குள்ள ஒரு தம்பதிக்கு 2017ல் திருமணம் நடந்துள்ளது.. ஆனால் திருமணம் முடிந்த 17வது நாளில், கணவரை விட்டு அந்தப்பெண் பிரிந்து சென்றுவிட்டார்.

அத்துடன், நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது கணவருக்கு ஆண்மை குறைவு இருப்பதால் தனக்கு நடந்த திருமணத்தை ரத்து செய்ய வேண்டும், தன்னுடைய கணவருக்கு ஆண்மை பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.


குறைந்த பாலியல் ஆர்வம்

உடனே நீதிமன்றமும், கணவனுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிட்டது.. புனே சசூன் மாநகராட்சி மருத்துவமனையில், கணவருக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது.. அதில் பெண்ணின் கணவர் பாலியல் உறவு கொள்ள தகுதியில்லாதவர் என்று கூறமுடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மருத்துவ அறிக்கையால், அதிருப்தி அடைந்த அந்தப்பெண், கணவருக்கு ஆண்மை சோதனை அடங்கிய முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொல்லி, மறுபடியும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, நீதிமன்றமும், கணவருக்கு முழு செக்கப் செய்ய அனுமதி வழங்கி கடந்த வருடம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், பெண்ணின் கணவர் இந்த உத்தரவை எதிர்த்து, மும்பை ஹைகோர்ட்டில் அப்பீலுக்கு போனார்.. இது சம்பந்தமாக மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், "மாநகராட்சி மருத்துவமனையில் ஏற்கனவே ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டுவிட்ட நிலையில், மறுபடியும் சோதனை நடத்த தேவையில்லை, மனுதாரருக்கு தற்போது 54 வயதாவதால், வயது மூப்பு காரணமாக, அவரது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்" என்றார்..

ஆண்மை பரிசோதனை

இந்த வாதத்தை எதிர்த்து மனைவி தரப்பிலும் வாதாடப்பட்டது.. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜாம்தார், அப்பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நீதிபதி தன்னுடைய உத்தரவில் சொல்லும்போது, "திருமணத்தின்போது கணவருக்கு 47 வயதும், பெண்ணுக்கு 40 வயதும் ஆகியிருந்தது. இப்போது அவர்களுக்கு 54 மற்றும் 47 வயதாகிறது. வயதாகும்போது பாலியல் நடவடிக்கைகள், பாலியல் ஆர்வம் குறைவது ஏற்படுவது இயல்புதான்.. எனவே, திருமணத்துக்கு பிறகு 8 வருடங்களாகிவிட்ட நிலையில், மருத்துவ சோதனைக்கு உத்தரவிடுவது பயனற்றது" என்று கூறி மனைவியின் கோரிக்கை தள்ளுபடி செய்தார்.

தம்பதி விவாகரத்து

மும்பை உயர்நீதிமன்றம் தந்திருந்த இந்த உத்தரவானது, பலரது கவனத்தையும் பெற்றிருந்தது. இந்நிலையில், மீண்டும் இதேபோன்ற ஒரு வழக்கு, இதே மும்பை நீதிமன்றத்தில் நடந்துள்ளது..

அதாவது, மகாராஷ்டிர மாநிலம் மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்த நபர், சத்தீஷ்கார் மாநிலம் ராய்பூரை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டனர்..பிறகு, அந்த பெண், தன்னுடைய கணவரை ஆண்மையில்லாதவர் என்று குறிப்பிட்டு, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்..

விவாகரத்து மனுக்கள்

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றமும், தம்பதிக்கு விவாகரத்து வழங்கிவிட்டது. ஆனால், முன்னாள் மனைவி விவாகரத்து தொடர்பான மனுக்களில் தன்னை ஆண்மையில்லாதவர் என கூறி அவதூறு பரப்பியதாக கணவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த செசன்ஸ் கோர்ட்டு கணவரின் புகார் குறித்து விசாரிக்க மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு உத்தரவிட்டது. ஆனால், செசன்ஸ் கோர்ட்டின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோாி முன்னாள் மனைவி தரப்பில் மும்பை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்தார்..

ஆண்மையில்லாதவர் - அவதூறு கிடையாது

இந்த மனுவை நீதிபதி எஸ்.எம். மோதக் அமர்வு தற்போது விசாரித்தது.. இதுகுறித்து நீதிபதி கூறும்போது, விவகாரத்து வழக்கு விசாரணையின்போது மனைவி, கணவரை ஆண்மையில்லாதவர் என்று சொல்வது அவதூறு ஆகாது.. திருமணத்தில் ஒரு பெண் எப்படி பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை நியாயப்படுத்தவே இப்படியான குற்றச்சாட்டுக்களை சொல்கிறாரே தவிர, அது அவதூறு கிடையாது.

விவாகரத்து தொடர்பான வழக்கில் ஆண்மை தொடர்பாக கூறுவது அவசியமானது. தம்பதிக்கு திருமண உறவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், மனைவி அவரது நலன்கருதி இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சொல்வது நியாயமானது.. அதையெல்லாம் அவதூறு என்று சொல்ல முடியாது என்று கூறி, பெண்ணுக்கு எதிரான முன்னாள் கணவரின் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+