சூப்பர் சர்ப்ரைஸ் தந்த பத்திரப்பதிவு.. தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு போன உத்தரவு.. மக்கள் குஷி
சென்னை: பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும், தமிழக பத்திரப்பதிவு துறை, அடுத்த அதிரடியை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த ஸ்வீட் தகவலும் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிகள் அனைத்துமே தற்போது ஆன்லைன் முறைக்கு மாறிவிட்டன.. எனவே, பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள் தொடர்பான விவரங்கள் அனைத்தும், முன்னதாகவே அதற்குரிய வெப்சைட்களில் பதிவு செய்யப்பட வேண்டும்..

டோக்கன் சிஸ்டம்: இதற்கு பிறகே, பத்திரங்களின் அடிப்படை சரிபார்ப்பு முடிந்த பிறகு விண்ணப்பதாரரின் விருப்பம் மற்றும் சார்பதிவாளரின் பணி அடிப்படையில் நேரம் ஒதுக்கப்பட்டு, பத்திரப் பதிவுக்கான டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
அந்தவகையில், தமிழகத்தில் சார் - பதிவாளர் அலுவலகங்களில், சராசரியாக நாளொன்றுக்கு, 100 முதல், 200 பத்திர பதிவுக்கான டோக்கன்கள் வழங்கப்படும்.. அதிலும், குறிப்பிட்ட சில நாட்களில், அதிக பத்திரங்கள் பதிவாக வாய்ப்புள்ள சமயத்தில், இந்த எண்ணிக்கை சற்று அதிகரிக்கப்படும்.
இப்படித்தான், சமீபத்தில் முடிந்த, ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு ஏற்கெனவே உள்ள 100 முன்பதிவு டோக்கன்களுடன் 50 முன்பதிவு டோக்கன்கள் இணையத்தில் அதிகரிக்கப்பட்டு பொது மக்கள் பயன் பெறும் வகையில் 150 ஆக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு ரூ.100 கோடி வருவாய், ஒரே நாளில் ஈட்டப்பட்டது.
அதிரடி அறிவிப்பு: அந்தவகையில், இன்றைய தினம் சுபமுகூர்த்த நாளாகும்.. இந்த தினத்தை முன்னிட்டு, அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.. இந்த கோரிக்கையை பதிவுத்துறை ஏற்றுள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் உள்ளதாவது:
சுபமுகூர்த்த தினங்கள் என்று கருதப்படும் நாட்களில் பத்திரப் பதிவுகள் அதிக அளவில் நடைபெறும். எனவே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அந்த நாட்களில் பத்திரப் பதிவுக்கு கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், ஐப்பசி முதல் நாளான அக்டோபர் 18-ம் தேதியே (இன்று) சுபமுகூர்த்த நாள் என்பதால், கூடுதலாக முன்பதிவு டோக்கன் ஒதுக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கோரிக்கைகள் வந்தன.
மகிழ்ச்சி: இதை ஏற்று, அக்.18-ம் தேதி ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படுகின்றன. அதேபோல, அதிக அளவில் பத்திரப் பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களில் சாதாரண முன்பதிவில் 100-க்கு பதிலாக 150 டோக்கன்களும், தத்கால் முன்பதிவில் 12-க்கு பதிலாக 16 டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications